Asianet News TamilAsianet News Tamil

வீடு புகுந்த ரியல் எஸ்டேட் அதிபர் அடித்து கொலை.. வசமாக சிக்கிய திமுக பிரமுகர்.. தலைமறைவு..!

திருச்சி மாவட்டம்  செங்கதிர் சோலையைச் சேர்ந்த சிவக்குமார் (எ) சோலை சிவா. இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சிவக்குமார் தனது வீட்டில் இருந்தபோது, திடீரென வந்த 2 பேர் சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கியதை அடுத்து ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் சரிந்தார். 

real estate Chancellor murder...Case filed against DMK Union Secretary
Author
Trichy, First Published Nov 29, 2021, 1:55 PM IST

திருச்சி அருகே சிவக்குமார் என்பவரை முன்விரோதம் காரணமாக கட்டையால் கொடூரமாக தலையில் அடித்துக் கொலை செய்த வழக்கில் திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 4 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம்  செங்கதிர் சோலையைச் சேர்ந்த சிவக்குமார் (எ) சோலை சிவா. இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சிவக்குமார் தனது வீட்டில் இருந்தபோது, திடீரென வந்த 2 பேர் சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கியதை அடுத்து ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் சரிந்தார். சிவகுமாரின் மனைவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இருவரும் தப்பித்து சென்று விட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். 

real estate Chancellor murder...Case filed against DMK Union Secretary

இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.  ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் கொலை தொடர்பாக அவரது மனைவி மைதிலி, சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், என் கணவர் சிவக்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். கடந்த வாரம் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன், ராஜீவ் காந்தி நகரில் உள்ள செங்கல் சூளை மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் மூலம் அகற்றினார். அதற்கு என் கணவரும் உடந்தை என எங்கள் ஊரைச் சேர்ந்த பழனியாண்டி மகனும், திமுக ஒன்றிய செயலாளருமான கதிர்வேல், பிரபல தொழிலதிபர் நாகராஜ் மகன் பிரபாகரன் என்கிற மருதராஜ் மற்றும் அங்கமுத்து மகன் தீபக் ஆகியோர் ஊரில் பிரச்சனை செய்துகொண்டிருந்தனர்.

அந்த விரோதம் காரணமாக நேற்று மாலை பிரபாகரன் மற்றும் தீபக் ஆகிய இருவரும் எங்கள் வீட்டு முன்பு நின்று என் கணவரை வரவழைத்து கட்டையால் தலை, காது, பின்னந்தலை ஆகிய இடங்களில் தாக்கினர். தடுக்கச் சென்ற என்னிடம், ‘அடுத்து விக்னேஸ்வரன்தான்’ எனச் சொல்லிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். என் கணவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று பார்த்தபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே என் கணவரை கொலை செய்த பிரபாகரன் தீபக் மற்றும் கொலைக்குக் காரணமான திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருந்தார். 

real estate Chancellor murder...Case filed against DMK Union Secretary

இந்த கொலை தொடர்பாக சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டை ஒட்டியுள்ள இடத்தைப் பெறுவது தொடர்பாக சிவகுமாருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து,  திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உள்பட 4 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். ஏற்கனவே கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கடலூர் திமுக எம்.பி. ரமேஷ்  கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios