தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,சென்னையில் 2 வார்டுகள் உள்பட தமிழக முழுவதும் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று திங்கட்கிழமை மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், சில இடங்களில் வாக்குபதிவின்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்குபதிவில் குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவரிடம் விரிவான அறிக்கையை மாநில தேர்தல் ஆணையம் கேட்டு பெற்றது.
அந்த அறிக்கையின்படி தற்போது 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மாலை 5 -6 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 5059,வண்ணாரப்பேட்டை 179-ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 1174, மதுரை திருமங்கலம் நகராட்சி 17-ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17, அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி 16 ஆம் வார்டு வாக்குச்சாவடிகள் 16M,16W, திருவண்ணாமலை நகராட்சி 25 ஆம் வார்டு வாக்குச்சாவடிகள் 57M,57W ஆகிய 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
