Asianet News TamilAsianet News Tamil

துண்டு கரும்பு கொடுப்பதனாலே பட்ஜெட்டில் துண்டு விழப் போகிறதா? திமுகவை வச்சு செய்யும் ஆர்.பி.உதயகுமார்..!

தமிழகத்தில் 43 ஆயிரம் ஏக்கருக்கு மேலே விவசாயிகள் செங்கரும்பு நடவு செய்துள்ளார். இதை நம்பி ஏக்கருக்கு 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் இதை அரசு கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்போடு வழங்கும் என்கிற நம்பிக்கையோடு அவர்கள் கரும்பை விதைத்து வளர்த்து வைத்திருக்கிறார்கள். 

rb udhayakumar slams dmk government
Author
First Published Dec 28, 2022, 11:39 AM IST

திமுக அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் வேதனையில் இருக்கிறார்கள். இந்த கரும்பு கொடுப்பதனாலே உங்களுடைய இந்த பட்ஜெட்ல என்ன துண்டு விழுவா போகிறது என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தில் 43 ஆயிரம் ஏக்கருக்கு மேலே விவசாயிகள் செங்கரும்பு நடவு செய்துள்ளார். இதை நம்பி ஏக்கருக்கு 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் இதை அரசு கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்போடு வழங்கும் என்கிற நம்பிக்கையோடு அவர்கள் கரும்பை விதைத்து வளர்த்து வைத்திருக்கிறார்கள். கடந்த  எடப்பாடியார் ஆட்சிகாலங்களில்  ஒவ்வொரு ஆண்டும் கரும்பு வழங்கப்பட்டது. 

rb udhayakumar slams dmk government

கடந்த 2022ம் ஆண்டு கரும்பு கொள்முதல் செய்ய 71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பலன் அடைந்து வந்தவர்கள் இன்றைக்கு கண்ணீரிலே தத்தளித்து கொண்டிருக்கிறார்கள்.  மிகப்பெரிய பொருளாதாரத்தில் கரும்பு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொருளாதார தாக்குதல் அவர்கள் மீது தொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கண்ணீரும் கம்பலையுமாக கவலையோடு இருக்கிறார். கரும்பு ஏன் வழங்கவில்லை என்று சொன்னால் அதற்கு பணம் தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று விளக்கம் தருகிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடியார்  தலைமையிலே  அம்மாவின் அரசிலே, பொங்கல் தொகுப்பில் 2,500 ரூபாய் ரொக்கம், அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி ஒரு  நீல கரும்பு 2 கோடியை 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.  கடந்த 2022 ஆண்டில் திமுக ஆட்சியல் 21 வரை பொருள்கள் வழங்கப்பட்டதாக சொல்லி அதிலே  எத்தனை லட்சம் புகார்கள்  இந்த அரசு சந்தித்தது என்பது நமக்கு நினைவிலே இருக்கிறது. இந்த ஆண்டு இல்லை என்றால் அடுத்த ஆண்டு கரும்பை கொடுத்துக் விடலமா? வேட்டி, சேலை என்றால் வைத்து கொடுக்கலாம் இது பார்த்துக் கொடுப்பது கூட அந்த குறுகிய கால அவகாசம் தான் இருக்கிறது.

ஏற்கனவே இருந்த நடைமுறையை மரபுகளை கடைப்பிடிப்பதனால் இந்த மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்று கூட முதலமைச்சர்  அதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இந்த பொங்கலில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டாமா? இது அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் வேதனையில் இருக்கிறார்களே இந்த கரும்பு கொடுப்பதனாலே உங்களுடைய இந்த பட்ஜெட்ல என்ன துண்டு விழுவா போகிறது. துண்டு கரும்பு கொடுப்பதனாலே பட்ஜெட்டில் துண்டு விழப் போகிறதா? பட்ஜெட்டில் துண்டு விழுவதாக தெரியவில்லை. 

ஏற்கெனவே அம்மாவின் அரசு திட்டங்கள் முடக்கப்பட்டு இருக்கிறது.  எடப்பாடியார்  முதல்வராக இருந்தால் கரும்பு கிடைத்திருக்கும், சர்க்கரை கிடைத்திருக்கும், அரிசி கிடைத்திருக்கும் இதனால் மகிழ்ச்சி கிடைத்தது. இப்போது வேதனை தான் இருக்கிறது.  இன்றைய முதலமைச்சர் அன்றைக்கு எதிர்கட்சிதலைவராக இருக்கும்  சொன்னதை மறந்து விட்டீர்களா, எடப்பாடியார் 2500 ரூபாய் வழங்கிய போது, நீங்கள் அப்போது ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று சொன்னீர்களே? சொன்னது என்ன ஆச்சு ஸ்டாலின் அண்ணாச்சி அவர்களே இந்த கரும்பை கொள்முதல் செய்ததாலே விவசாயி உடைய கண்ணீரைத் துடைக்கிற அந்த நல்ல காரியம் அல்லவா நடைபெறும். அதில் என்ன உங்களுக்கு வருத்தம் என்ன தெரியவில்லை. இது எப்படி இந்த சிந்தனைகளை உதித்தது என்று தெரியவில்லை. 

rb udhayakumar slams dmk government

ஆகவே, அரசை நம்பி விதைத்திருக்கிற கரும்பை கொள்முதல் செய்வதற்கு இந்த அரசு முன் வரவேண்டும். அதை ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகையுடன், கரும்பை இணைக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios