Asianet News TamilAsianet News Tamil

ஜல்லிக்கட்டு வார்த்தை அல்ல, சுவாசம்..! மீட்ட உரிமையை எள்முனையளவும் தவறவிடக்கூடாது- ஆர்.பி உதயகுமார்

ஜல்லிக்கட்டு வார்த்தை அல்ல தமிழர்களின் சுவாசம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீட்டு தந்த ஜல்லிக்கட்டு உரிமையை தமிழக அரசு காப்பாற்ற முன்வருமா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

RB Udayakumar has insisted that the Tamil Nadu government should not give up the rights related to jallikattu competition
Author
First Published Nov 25, 2022, 12:17 PM IST

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு மீட்ட உரிமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிகட்டு இது வெறும் வார்த்தை அல்ல, நம் இனத்தின் அடையாளம், நம் வீரத்தின் அடையாளம், நம் பாரம்பரியத்தின் அடையாளம், நம் பண்பாட்டின் அடையாளம் அதனால் தான் அந்த வீரத்தின் நம்முடைய பாரம்பரியத்தின் பண்பாட்டின் நம் இனத்தின் அடையாளமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஒரு தடை என்றகிற போது ஒட்டுமொத்த உலக தமிழினமே உணர்ச்சி கொந்தளிப்பாக நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்திய அந்த வரலாறு இந்த இந்திய திருநாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

RB Udayakumar has insisted that the Tamil Nadu government should not give up the rights related to jallikattu competition


 இப்போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டுவந்த, அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான, விசாரணையை உச்சநீதிமன்றம் வருகின்ற 29 தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது..
ஜல்லிக்கட்டு தொடர்பாக, அவசர சட்டம் இயற்றிய தமிழக சட்டப்பேரவையின் அதிகாரம் குறித்து மட்டுமே ,அக்கறை செலுத்த உள்ளோம் குறித்து  என  நீதியரசர்கள் தெரிவித்திருப்பது,  நாம் இந்த வழக்கில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும், அக்கறை செலுத்த வேண்டும் சட்ட வல்லுனர்கள் சட்ட நிபுணர்களோடு நாம் பல்வேறு கருத்துக்களை, இந்த ஜல்லிகட்டு ஒரு உணர்வு ,ஒரு உணர்ச்சி ,ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு, ஒரு நாடு, ஒரு தேசம் சார்ந்த ஒரு பிரச்சனை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது .


ஆகவே ஜல்லிக்கட்டு என்பது வெறும் வார்த்தை அல்ல, அது நம்முடைய சுவாசம். சீறி வருகிற காளைகளை இளம சிங்கங்களாக அடக்குகிற அந்த இளம் சிங்கங்களின்   கள்ளம் கபடமற்ற அந்த வீரத்தை,  உலகத்திற்கு எடுத்துக்காட்டுகிற தமிழ் பாரம்பரியத்தின் வீரத்தை, நிலை நாட்டுவது இந்த அரசுக்கு மிக முக்கிய கடமையாக இருக்கிறது. ஆகவே இன்றைக்கு இளைஞர்களுக்கு ,ஒரு அச்சம் இன்றைக்கு ஏற்பட்டிருப்பது நமக்கு கவலை அளிக்கிறது. தொடர்ந்து முதல் முதலாக அன்னை தமிழகத்தில், ஒரு முதல்வர் பச்சைக்கொடி துவக்கி வைத்த வரலாறு பச்சைக் கொடியை அசைத்து துவக்கிவைத்தவர்  என்றால் எடப்பாடியார் ஆவார் .

RB Udayakumar has insisted that the Tamil Nadu government should not give up the rights related to jallikattu competition

இந்த ஜல்லிக்கட்டு போட்டியிலே நமக்கு எதிர் தரப்பை சார்ந்தவர்கள் எடுத்து வைத்திருக்கிற வாதம் நமக்கு ஒரு கவலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஜல்லிகட்டு போட்டியில் மாடுகள் படுகாயங்கள் ஏற்படுகின்றன, விலங்குகளுக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டு அனுமதிக்க கூடாது. விலங்குகளின் பாதுகாப்புக்காக பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் நோக்கத்தை தமிழகத்தின் அவசர சட்டம் சிதைக்கிறது, என்றெல்லாம் வேதனை தருகிற வார்த்தைகளை  நீதியரசர்களுக்கு முன்பாக வழக்கறிஞர்கள் எடுத்து வைத்திருப்பது நம்மை நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.  ஜல்லிக்கட்டு உரிமையை நமது உரிமை, நம் பாரம்பரிய உரிமை, நம் பண்பாட்டு உரிமை இது நேற்று பெற்ற உரிமை அல்ல,

RB Udayakumar has insisted that the Tamil Nadu government should not give up the rights related to jallikattu competition

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய  75 ஆண்டுகள் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோமே அதைவிட உரிமை என்பது நமது பிறப்புரிமை. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டுகள் நமது அடையாளமாகும்.

நம் வீரத்தின் அடையாளமாக சீறி வருகிற அந்த காளைகளை இளம் சிங்கங்கள் அடக்குகிற அந்த காட்சி , நம் வீரத்தின் அடையாளமே தவிர, யுத்த களத்திற்கு செல்கிற போர்வீரன் வெற்றியை நோக்கி செல்லுகிறான், அங்கே அவன் உயிரை சிறிதாக நினைப்பதில்லை, தன் தாய் நாட்டிற்கு, தன்னுடைய வெற்றியை பரிசாக தர வேண்டும். என்னுடைய வெற்றி என் தாய் நாட்டின் வெற்றி என்று சொல்லுகிற அந்த வீர பரம்பரை வேலுநாச்சியார் புறநானூற்று தாய்மார்கள் பெற்றெடுத்த அந்த இளம் சிங்கங்கள், களத்தில் நின்று களமாடுகிற அந்த காட்சியிலே, உயிரை துச்சம் என மதித்து, உயிர் பெரிதல்ல, மானம் பெரிது, வீரம் பெரிது, பண்பாடு பெரிது, பாரம்பரிய பெரிது, மொழி பெரிது ,இனம் பெரிது, நாடு பெரிது  தமிழ் மண் பெரிது என்று களமாடுகிறார்கள்.

RB Udayakumar has insisted that the Tamil Nadu government should not give up the rights related to jallikattu competition
 ஜல்லிகட்டு உரிமையை பெற்று தருகிற அந்த முழு பொறுப்பு திராவிட முன்னேற்றக் அரசுக்கு இருக்கிறது. அதில் எள்முனையளவும் தவறவிட்ட கூடாது.  எடப்பாடியாரின் வழிநின்று, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க இந்த அரசு தவறி விடக்கூடாது என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios