Asianet News TamilAsianet News Tamil

காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் மாநாடு நடைபெற்று இருந்தால் தேனிக்காரரின் மானம் கப்பல் ஏறி இருக்கும்- ஆர் பி உதயகுமார்

 அதிமுக மாநாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட செயலாளர்களின் பணிகளை முடக்கவே சோதனை நடத்தப்படுகின்றது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். 

RB Udayakumar has accused the DMK of deceiving the people by not fulfilling its election promises
Author
First Published Sep 14, 2023, 12:16 PM IST

திமுக தேர்தல் வாக்குறுதி

மதுரையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத முதல்வராக வலம் வருகிறார், திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்த 35 சதவிகித விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன, மக்களை ஏமாற்றும் விதமாக திமுக மக்களிடம் வாக்குறுதிகளை வழங்கியதாக குற்றம்சாட்டினார்.

மக்களிடம் வரவேற்பு பெற்ற அதிமுக திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது,  பழிவாங்கும் நடவடிக்கையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை, அதிமுக மாநாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட செயலாளர்களின் பணிகளை முடக்கவே சோதனை நடத்தப்படுகின்றது என குற்றம்சாட்டினார். 

RB Udayakumar has accused the DMK of deceiving the people by not fulfilling its election promises

ஓபிஎஸ் புரட்சி பயணம்

கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமார் தமிழ்நாட்டிதற்கு தண்ணீர் தர முடியாது என அறிக்கைகள் விடுகிறார்கள், கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கைக்கு தமிழக முதல்வர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதிமுக மாநாட்டை பார்த்து சிலர் பயணத்தை முன்னெடுக்க முயற்சித்தனர், புரட்சிப்பயணம் மேற்க்கொள்ள முயன்றவர்களுக்கு இயற்கையும், தொண்டர்களும் ஒத்துழைக்கவில்லை,

புலியை பார்த்து எலி சூடு போட்டுக் கொண்ட கதையாக உள்ளது.   காஞ்சிபுரத்தில் மாநாடு நடைபெற்று இருந்தால் தேனிக்காரரின் மானம் கப்பல் ஏறி இருக்கும், ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவுக்கான வளர்ச்சி பாதையாக அமையும், 18 ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த விபரங்கள் தெரிய வரும் என கூறினார்.

இதையும் படியுங்கள்

டெல்லிக்கு புறப்பட்டு சென்ற எடப்பாடி..! எதற்காக செல்கிறார்.? யாரையெல்லாம் சந்திக்க போகிறார்.?

Follow Us:
Download App:
  • android
  • ios