திமுகவிற்கு எதிராக போராட்டம்..! அதிமுக தொண்டர்களுக்கு தன் கையாலயே உணவு சமைத்த ஆர்.பி.உதயகுமார்

திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆலோசனை நடத்த மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்த நிலையில், தனது குடும்பத்துடன் சேர்ந்து தொண்டர்களுக்காக ஆர்.பி.உதயகுமார் உணவு சமைத்தார்.

RB Udayakumar cooked food for the executives attending the AIADMK consultative meeting

திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்

திமுக அரசால் உயர்த்தப்பட்ட  சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச்செயாலளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்தநிலையில், வருகின்ற 9ம் தேதி பேரூராட்சி பகுதியிலும், 13ம் தேதி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் உட்பட்ட பகுதிகளிலும், 14 ஆம் தேதி ஒன்றியங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்களை அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுநரை திரும்ப பெறக்கோரி முற்றுகை போராட்டம்..! ஒன்றன் பின் ஒன்றாக களத்தில் குதிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்

தொண்டர்களுக்கு உணவு சமைத்த ஆர் பி உதயகுமார்

இந்தநிலையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும்  நிர்வாகிகளுக்கு உணவுகளை சமைத்திட சமையல் கலைஞருடன் இணைந்து, தனது தாயார் மீனாள், தனது மகள் பிரியதர்ஷினி ஆகியோருடன் இணைந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சமையல் பணிகள் ஈடுபட்டார். சாம்பார், புளி குழம்பு, கூட்டு பொரியல் ஆகியவற்றிற்கு  தேவையான காய்கறிகளை வெட்டியும், அதனை தனது குடும்பத்தின் சார்பில் உணவுகளை தயாரித்தார். இதனை பார்த்த அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இதையும் படியுங்கள்

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்..! அதிர்ச்சியில் அதிமுகவினர்..
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios