ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்..! அதிர்ச்சியில் அதிமுகவினர்..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் நாளை இணைகிறார்.
 

OPS supporter Kovai Selvaraj joins DMK

அதிமுகவில் உட் கட்சி மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு தரப்பு நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அணியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ்யின் வலதுகரமாக கோவை செல்வராஜ் செயல்பட்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் அந்த அணியினரை கடுமையாக விமர்சித்தும் கருத்து கூறி வந்தார். இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கோவை செல்வராஜ் நீக்கப்பட்டார். இதனையடுத்து கோவை பகுதிக்கு புதிய மாவட்ட செயலாளரை ஓ.பன்னீர் செல்வம் நியமித்தார்.

ஜி 20 ஆலோசனை கூட்டம்..! இபிஎஸ்கு அழைப்பு விடுத்தது ஏன்..? ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறிய பரபரப்பு தகவல்

OPS supporter Kovai Selvaraj joins DMK

கோவை மாவட்ட செயலாளர் நீக்கம்

இதனையடுத்து அதிமுகவின் வளர்ச்சிக்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் செயல்படவில்லையென குற்றம்சாட்டிய கோவை செல்வராஜ்,  ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் சுயநலமாக செயல்படுவதாக தெரிவித்தார். எனவே  ஓபிஎஸ் அணி மற்றும் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் கூறினார். இதனையடுத்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கோவை செல்வராஜ் அதிமுக தலைவர்கள் பாஜக தயவில் உள்ளதாக விமர்சித்தார். அமித்ஷா வரும் போது சாமியை பார்ப்பது போல் துண்டை மடியில் கட்டிக்ககொண்டு நிற்பதாக தெரிவித்தார்.

இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்... ஜி20 ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

OPS supporter Kovai Selvaraj joins DMK

திமுகவில் இணையும் கோவை செல்வராஜ்

தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட தைரியம்  அண்ணா,எம்ஜிஆர்,கலைஞர், ஜெயலலிதா ஆகியோருக்கு மட்டுமே இருப்பதாக தெரிவித்தவர் தற்போது மு.க.ஸ்டாலினும் அந்தவரிசையில் இடம்பெற்று இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

ஆளுநரை திரும்ப பெறக்கோரி முற்றுகை போராட்டம்..! ஒன்றன் பின் ஒன்றாக களத்தில் குதிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios