Asianet News TamilAsianet News Tamil

முப்படைத் தளபதி ராவத் கவலைக்கிடம்... ஹெலிக்காப்டர் ரகசியம் தெரியுமா..? விரையும் முதலைச்சர் ஸ்டாலின்..!

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

Rawat worried ... Do you know the secret of the helicopter ..? Stalin is the first Chief Minister ..!
Author
Tamil Nadu, First Published Dec 8, 2021, 3:04 PM IST


 Mi-17V5 சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு பயன்படக்கூடியது. இந்த ஹெலிக்காப்டர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. இந்த ஹெலிக்காப்டரில் 36 பேர் வரை பயணிக்கலாம். 4 டன் எடை வரை சரக்குகளை ஏற்றிச் செல்லலாம். மணிக்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது. 

முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர் மனைவியுடன் பயணம் செய்தாகக் கூறப்படும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அவசர ஆலாசனை நடத்தினார்

.Rawat worried ... Do you know the secret of the helicopter ..? Stalin is the first Chief Minister ..!

வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக தெரிகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை 12.20 மணியளவில் வானிலை பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கிழே விழுந்து நொறுங்கியது. 4 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.Rawat worried ... Do you know the secret of the helicopter ..? Stalin is the first Chief Minister ..!

ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை யார் யார் இறந்துள்ளனர் எனஅடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. குன்னூர் மலைப்பகுதியில் காட்டேரி என்ற இடத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சருடன் ஆலோசனை நடத்திவருகிறார். விபத்து குறித்து ராஜ்நாத் சிங் பிரதமரிடம் விளக்கமளித்து வருகிறார்.Rawat worried ... Do you know the secret of the helicopter ..? Stalin is the first Chief Minister ..!

விரைவில் ராஜ்நாத் சிங் குன்னூர் விபத்துப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios