Asianet News TamilAsianet News Tamil

அதிமுக எம்.பி.ரவீந்திரநாத்துக்கு எதிராக காய் நகர்த்தும் இபிஎஸ்.. மீண்டும் முறையீடு..! அடுத்தது என்ன நடக்கும்?

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது, அதிமுக சார்பில் ரவீந்திரநாத் மட்டுமே மக்களவையில் எம்.பி.யாக உள்ளார்.

Ravindranath should not be recognized as AIADMK MP.. CV Shanmugam appeals again
Author
First Published May 11, 2023, 6:44 AM IST

தேனி எம்.பி. ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக எம்.பி.யாக அங்கீகரிக்கக்கூடாது என மக்களளை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம்  அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது, அதிமுக சார்பில் ரவீந்திரநாத் மட்டுமே மக்களவையில் எம்.பி.யாக உள்ளார். இந்நிலையில், ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்.க்கு இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில்  முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மூத்த மகன் எம்.பி.  ரவீந்திரநாத், இளைய மகன் ஜெயபிரதீப் ஆகியோர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். 

Ravindranath should not be recognized as AIADMK MP.. CV Shanmugam appeals again

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.யாக அங்கீகரிக்கக்கூடாது என ஏற்கனவே மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால்  அதிமுக எம்.பி.யாக நீடித்து வருகிறார். 

Ravindranath should not be recognized as AIADMK MP.. CV Shanmugam appeals again

இந்நிலையில், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டியும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைக் காரணம் காட்டியும் தேனி எம்.பி. ரவீந்திரநாத்தின் அதிமுக எம்.பி.யாக அங்கீகரிக்கக்கூடாது என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து எம்.பி சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios