செப்டம்பர்1ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும். இதனை ரேசன் கடை ஊழியர்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கே வந்து வழங்குவர்.தமிழகத்தில் செப்டம்பர் மாதத்துக்கான ரேசன் பொருட்கள் வழங்கப்படவிருக்கின்றன. இதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் டோக்கன் விநியோகம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.செப்.1 வரை டோக்கன் வழங்கப்படும். இதனை ரேசன் கடை ஊழியர்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கே வந்து வழங்குவர்.

பின்னர், செப்டம்பர் 3 ஆம் தேதி புதன்கிழமை முதல் ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடங்கும். அப்போது, டோக்கனில் உள்ள நாள், நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க கடைக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு அட்டைக்கு ஒருவர் மட்டுமே வந்தால் போதுமானது என்றும் இந்த மாதம் புதியதாக ஒரு அறிவிப்பும் தரப்பட்டுள்ளது.