Asianet News TamilAsianet News Tamil

ரேஷன் இலவசப் பெருட்கள் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிப்பு..!! தமிழகத்தில் 1.11 கோடி பேர் பயனடைவர் என தகவல்..!!

இது, இந்திய உணவு கழகம் சாதாரணமாக கையாளும் அளவைவிட இருமடங்கு அதிகமானதால், தற்போதுள்ள சேமிப்பு கிடங்கு, கொள்ளளவு மற்றும் போக்குவரத்து வசதிகளை கொண்டு இந்த புதிய சூழலை கையாள்வது FCI க்கு அதில சவாலாக அமைந்தது. 

Ration free items extended for another 5 months, 1.11 crore people will benefit in Tamil Nadu
Author
Chennai, First Published Jul 31, 2020, 8:00 PM IST

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன் யோஜனா (PMGKAY) திட்டத்தின் முதல் கட்டம், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை வெற்றிகரமாக செயல்பட்டதால் இந்திய அரசாங்கம் இத்திட்டத்தினை மேலும் 5 மாதங்கள் அதாவது ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரை நீட்டித்துள்ளது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய (NFSA) மற்றும் (AAY)திட்டத்தின் கீழ் 81 கோடி பயனாளிகள் (தமிழ்நாட்டில் 1.11 கோடி பயனாளிகள் ) இதன் மூலம் 5 கிலோ அரிசி கோதுமை பெறுவார்கள், 

(PMGKAY) திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக நாடு முழுவதற்கும் இந்த ஐந்து மாதங்களுக்கு (ஜூலை நவம்பர் 2020)  மொத்தம் 200 புள்ளி 19 லட்சம் மெட்ரிக்  டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 8.93 லட்சம் மெட்ரிக் டன்கள்(8.54 LMT அரிசி மற்றும் 39307 MT கோதுமை மற்றும் புதுச்சேரிக்கு 3171 மெட்ரிக் டன் அரிசி  ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாட்டுக்கு மாநில அரசு மற்றும் பயனாளிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் 8-7-2020 அன்று தொடங்கி 28-7-2020 வரை ஜூலை 2020 மற்றும் ஆகஸ்டு 2020 மாதங்களுக்கான தொகை 3.56 LMT-இல் 2.54 LMT (72%) உணவு தானியங்கள் பயனாளிகளுக்கு கொடுப்பதற்காக தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Ration free items extended for another 5 months, 1.11 crore people will benefit in Tamil Nadu

PMGKAY இரண்டாம் கட்டத்தின் கீழ் ஐந்து மாதங்களுக்காக ஒதுக்கப்பட்ட 200.19 LMT உணவு தானியங்களை சேர்த்து, இந்திய அரசு NFSAF மற்றும் AMY திட்டத்தின் கீழ் ஐந்து மாதத்திற்கு மொத்தம் 455 LMT அளவிலான உணவு தானியங்களை பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. NFSA மற்றும் AAY திட்டத்தின் கீழ் உள்ள  ஒவ்வொரு பயனாளிக்கும் தான் சாதாரணமாக மானிய விலையில் பெரும் உணவு தானியங்களையும் தாண்டி கூடுதலாக 5 கிலோ கோதுமை அல்லது அரிசி (PMGKAY-ii) அவரவர் குடும்ப அட்டையின் தகுதிக்கேற்ப முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்திய அரசு ஒதுக்கியுள்ள உணவு தானியங்களை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சேர்ப்பதற்கு விரிவான மற்றும் விவரமான தளவாடங்கள் திட்டமிடலை இந்திய உணவு கழகம் மேற்கொண்டுள்ளது. 

Ration free items extended for another 5 months, 1.11 crore people will benefit in Tamil Nadu

இது, இந்திய உணவு கழகம் சாதாரணமாக கையாளும் அளவைவிட இருமடங்கு அதிகமானதால், தற்போதுள்ள சேமிப்பு கிடங்கு, கொள்ளளவு மற்றும் போக்குவரத்து வசதிகளை கொண்டு இந்த புதிய சூழலை கையாள்வது FCI க்கு அதில சவாலாக அமைந்தது. எனினும் இதனை எதிர்கொள்வதற்கு FCI தயாராக உள்ளது. ஆரம்பகால பொது முடுக்கத்தின் போது இருந்த இக்கட்டான காலத்தில் கூட, இதுவரை கண்டிராத அளவு உணவு தானியங்களை FCI கையாண்டு, தனது தளவாட செயல்பாட்டில் சாதனை படைத்தது. எந்த ஒரு இந்திய குடிமகனும் பசி பட்டினியால் வாடக்கூடாது என்பதை நிலைநாட்டுவதற்காக உணவு தானியங்கள் எல்லா மூலை முடுக்கிற்கும் சென்று சேர வேண்டும் என்ற இந்திய அரசின் லட்சியத்தை நிறைவேற்றுகிறது. 

Ration free items extended for another 5 months, 1.11 crore people will benefit in Tamil Nadu

மேலும் தற்போதைய கொள்முதல் பருவம் முடிவடைந்த நிலையில், தேசிய அளவில் மொத்தம் 389.76 LMT அளவு கோதுமையும் 504.91 டMT அரிசியும் கொள்முதல் செய்து FCI  புதிய சாதனை படைத்துள்ளது. என இந்திய உணவுப் பொருள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios