Asianet News TamilAsianet News Tamil

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் மனமாற்றம்... எடப்பாடியை சந்தித்ததால் பரபரப்பு..!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அறந்தாங்கி தொகுதி அதிருப்தி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி சந்தித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

rathinasabapathy meet Edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Jul 2, 2019, 5:19 PM IST

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அறந்தாங்கி தொகுதி அதிருப்தி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி சந்தித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 rathinasabapathy meet Edappadi palanisamy

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக இரண்டு அணியாக பிளவுபட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது. பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒற்றிணைந்து சசிகலா மற்றும் தினகரனை ஓரம்கட்டினர். இதனையடுத்து, திடீரென முதல்வருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியதால் தற்போது 18 எம்.எல்.ஏ.க்களும் அவர்களது பதவிகளை இழந்தனர்.

 rathinasabapathy meet Edappadi palanisamy

இந்நிலையில், மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆகையால், அதிமுக எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். இதனையடுத்து, அவர்களை தகுதி நீக்க செய்ய வேண்டும் கொறடா ராஜேந்திரன் பரிந்துரையை ஏற்று சபாநாயகர் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். rathinasabapathy meet Edappadi palanisamy

இதனையடுத்து, உச்சநீதிமன்றம் தலையிட்டு அந்த மூவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என தடை விதித்தது. இந்நிலையில், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதல்வரை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios