முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது அவதூறு செய்தி வெளியிட்ட ஜூனியர் விகடன் இதழுக்கு எதிராக 1 கோடி ரூபாய் மானநஷ்டஈடு கேட்டு தொடர்ந்த வழக்கில், ஆ. ராசா நீதிமன்றத்தில் ஆஜராகி எழுத்துபூர்வ வாக்குமூலம் அளித்தார்

கடந்த 2008ம் 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக ஜூனியர் விகடன் இதழில் தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியிட பட்டன. இந்த கட்டுரைகள் தனது புகழுக்கு களங்கம் விளைவித்ததாகவும், மேலும் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவும் கூறி, 1 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா மனு தாக்கல் செய்திருந்தார். 

மேலும் அவரது மனைவி பரமேஷ்வரி 25 லட்ச ரூபாய் மான நஷ்டஈடு கேட்டும் வழக்கு தொடர்ந்தார். குடும்பத்தை பற்றி எந்த புகைப்படமோ, அவதூறு செய்தியோ வெளியட கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை தாக்கல் செய்தார்.