தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும்; இல்லாவிட்டால் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகை யில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண் டும், முன்னதாக, சட்டத்தைக் கேள்விக் குறியாக்கி இருக்கும் உச்சநீதி மன்றத் தீர்ப்பை தடுக்கும் வகையில் உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நாடு முழுவ தும் தலித் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது, தலித் மக்களின் பாதுகாவலன் என்று தன்னைத்தானே கூறிக்கொள் ளும் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு நெருக்கடியாக மாறியது. அவர் பாஜக கூட்டணியிலேயே அங்கம் வகிக்கும் நிலையில், எங்கே, தலித் மக்களின் நம்பிக்கை இழந்துவிடுவோமோ என்று அச்சமடைந்துள்ளார்.

எனவே, அவசரச் சட்டம் தொடர் பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அண்மையில் நோட் டீஸ் ஒன்றை அளித்த பஸ்வான், ஆகஸ்ட் 9 முதல் தலித் அமைப்புக்களை இணைத்து தொடர் போராட் டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், ‘இப்பிரச்சனையில் பிரத மர் மோடி தலையிட்டு உரிய தீர்வு காண்பார்’ என்று எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறில்லாத பட்சத்தில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற தயங்க மாட்டோம் என்றும் பஸ்வான் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் இந்தப் பிரச்சனையில் தெலுங்கு தேசம் கட்சியைப்போல் நடந்து கொள்ள மாட்டோம் என்று சற்று பம்மியுள்ளார்.