Ramnath govinth wishes Ilayaraja 75 th birthday

75 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசை உலகின் தலைசிறந்த கலைஞரான இசைஞானி இளையராஜா இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி இசை ரசிகர்கள் பலரும் அவருக்கு புகழ்மாலை சூட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழில் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . இவ்வாண்டுத் தொடக்கத்தில்,அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன் - குடியரசுத் தலைவர் கோவிந்த்.” என அவர் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழியிலும் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இளையராஜாவுக்கு தான் வழங்கிய பத்ம விபூஷண் விருது கொடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஜனாதிபதி இணைத்து பதிவிட்டுள்ளார்.