ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ்.. விசாரணை வளையத்தில் 2 பேர்.!

அமைச்சர் நேருவின் சகோதரர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை, இதனையடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

Ramajayam murder case.. Police close to criminals

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது. 

அமைச்சர் நேருவின் சகோதரர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை, இதனையடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொடூரமான முறையில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டிருந்தார். இவரது கொலை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க;- பாஜக கூட்டணியான இபிஎஸ் ஆட்சியிலேயே ஆர்எஸ்எஸ் பேரணி நடக்கல.! ஸ்டாலின் ஆட்சியில் அனுமதி-இறங்கி அடிக்கும் சீமான்

Ramajayam murder case.. Police close to criminals

கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் பல  ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பின்னர், ராமஜெயத்தின் சகோதரரான ரவிச்சந்திரன், இந்த வழக்கை தமிழக போலீஸாரே விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. பாரதிதாசன், சிபிசிஐடி, சிபிஐ அமைப்புகள் 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக்கூறி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.  தூத்துக்குடி எஸ்.பி.-யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர். 

இதனையடுத்து, கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே,  சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தங்கள் விசாரணை அறிக்கையை இரண்டு முறை தாக்கல் செய்து மேலும் இந்த வழக்கில் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

Ramajayam murder case.. Police close to criminals

அது வழங்கப்பட்டிருந்த நிலையில் தங்கள் விசாரணையை தொடர்ந்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தற்போது இரண்டு பேரை  தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேசன், புதுக்கோட்டை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் உள்ளிட்ட பல முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி... பகீர் கிளப்பும் கூட்டணி கட்சி தலைவர்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios