பழைய செய்தி தான் - இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக என குறிப்பிட்டு தனது முகநூல் பக்கத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டமும் ஏகடியம் செய்த திமுகவினரும்! தலைப்பில் அவர் ஒரு பழைய மேட்டரை அவிழ்த்துவிட்டுள்ளார்.

அதில், தமிழக அரசியலிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கத் தொடங்கியது 1980&ஆம் ஆண்டுக்குப் பிறகு தான். 1980&ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு முழுவதும் பல வன்னியர் சங்கங்கள் செயல்பட்டு வந்தன. அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பும் இல்லை..... ஒற்றுமையும் இல்லை. அதனால் தமிழக அரசியலில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை.

அதனால் வன்னியர்களுக்கான சமூகநீதியை வென்றெடுக்க அனைத்து வன்னியர் அமைப்புகளையும் இணைத்து வன்னியர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினேன். அப்போது ஊர் ஊராகச் சென்று வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு பெற வேண்டியதன் அவசியம் குறித்து பேசுவேன். அதற்காக மேடை அமைப்பதெல்லாம் கிடையாது. ஊருக்குள் சென்று மக்களைக் கூட்டி, அவர்கள் மத்தியில் ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று பேசுவது தான் வழக்கம்.

வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக நான் மேற்கொண்டு வரும் போராட்டங்களை அறிந்ததும் ஏராளமான வன்னிய மக்கள் அந்த சங்கத்தில் இணைந்தனர். நாளுக்கு நாள் சங்கம் வலிமை அடைந்தது. அப்போது அந்த சங்கத்தில் இணைந்தவர்களில் 90 விழுக்காட்டினர் அதிமுகவைச் சேர்ந்த வன்னியர்கள் தான். வன்னியர்களுக்கு ராமதாசால் தனி இடஒதுக்கீடு வாங்கித் தர முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஆனால், திமுகவைச் சேர்ந்த வன்னியர்களில் பெரும்பான்மையினர் வன்னியர் சங்கத்தில் சேரவில்லை. ‘‘யாரோ ராமதாசாம்.... டாக்டராம்... ஊர் ஊராகப் போய் ஸ்டூல் மீது ஏறி நின்று வன்னிய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசுகிறாராம். இவர் என்ன செய்து விடப் போகிறார்’’ என்று தான் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஏகடியம் பேசினார்கள்.

இதையெல்லாம் கடந்து தான் தொடர் போராட்டங்களை நடத்தி 20% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது எனது தலைமையிலான வன்னியர் சங்கம். ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடினால் சமூக நீதியை வென்றெடுப்பதிலும், அரசியலிலும் சாதிக்கலாம் என்பதற்காகவே, இதைக் கூறுகிறேன் பழைய மேட்டரை அவிழ்த்துவிட்டுள்ளார்.