Asianet News TamilAsianet News Tamil

கணவரை இழந்தவர்கள் என் வீட்டுக்கு வராதீங்கன்னு விரட்டியவர் ராமதாஸ்... வன்னியர் சங்க தலைவர் திடுக்!

இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் இறந்து போனார்கள். அவர்களது குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை.

Ramadoss was the one who chased away the stubborn idiots who came to my house and ran away ... Vanniyar Sangam leader Tiduk!
Author
Tamil Nadu, First Published Nov 25, 2021, 4:43 PM IST

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த வன்னியர்களின் மனைவிகள் உதவி கேட்டு ராமதாஸ் வீட்டுக்கு சென்றபோது விதவைகள் என் வீட்டுக்கு வராதீங்க ஓடிப்பொங்கன்னு விரட்டினார் ராமதாஸ் என வன்னியர் சங்க தலைவர் சி.என். ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 Ramadoss was the one who chased away the stubborn idiots who came to my house and ran away ... Vanniyar Sangam leader Tiduk!

இதுகுறித்து அவர், ‘’இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் இறந்து போனார்கள். அவர்களது குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை. இவர்களுக்கு வாழ்வாதாரம் அந்த 25 பேரை வைத்து தானே. அந்த 25 பேரது குடும்பத்தினரும் ராமதாஸ் வீட்டுக்கு போய் உதவி கேட்டபோது, தாலி அறுத்தவர்கள் எல்லாம் இங்கே வரக்கூடாது ஓடிப்போங்கடினு விரட்டியவர் ராமதாஸ். பாப்பணப்பட்டு ரங்கா முதன் முதலில் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். 

25 வது ஆளாக சிறுதொண்டைமான் பலியானார். குறைந்தபட்ச இரக்கம் இல்லை. நமக்காக இறந்தார்கள். அவர்களை வைத்து தான் நாம் வாழ்கிறோம். அவர்களின் உயிர்த்தியாகத்தால்தான் மேலிருக்கிறோம் என்ற நினைப்பே அவரிடம் இல்லை. நாங்கள் அந்த 25 பேர் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் சென்று முறையிட்டோம். ‘’ நீங்கள் சமூகநீதிக் காவலர் முதல்வரே. நீங்கள் இவர்களுக்கு கருணைத் தொகை கொடுங்கள். நிதி உதவி செய்யுங்கள் எனக் கேட்டோம். Ramadoss was the one who chased away the stubborn idiots who came to my house and ran away ... Vanniyar Sangam leader Tiduk!

அவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் கருணைத் தொகை. மாதாமாதம் 1500 ரூபாய் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார். கொடுத்த அந்த 3 லட்சம் ரூபாயையும் வாங்கிட்டு போய்ட்டார் ராமதாஸ். நான் 5 லட்சம் தருகிறேன் எனச் சொல்லி ஏமாற்றி வாங்கிச் சென்று விட்டார். அவர்களது குடும்பம், ஏரி வேலை கூலி வேலைக்குச் சென்று வருகிறவர்கள். அவர்களது குடும்பம் நிற்கதியாக நடுத்தெருவுக்கு வந்து விட்டது. நாடககாதலை தொடங்கி வைத்ததே ராமதாஸ்தான். ராமதாஸ் ஒட்டுமொத்த வன்னியர்களின் முகம் கிடையாது’’ என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios