ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது. அதில் சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் உப்பு தின்னா தண்ணி குடிக்கணும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.
மேலும் பேராபத்தில் இருந்து தமிழகம் தப்பித்து விட்டது எனவும் சசிகலாவுக்கு சிறைத்தண்டனை கிடைத்திருப்பதால் கங்கை அமரன் இன்று இரவு நிம்மதியாக தூங்குவார் எனவும் தெரிவித்துள்ளார்.

பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் ஆன்மாக்கள் சாந்தியடையும் என குறிபிட்டுள்ளார்.
மோசடியான தீர்ப்பின் அடிப்படையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவின் வெற்றி செல்லாது எனவும், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2011 - 2016 காலத்தில் அமைச்சர்களாக இருந்த அனைவர் மீதும் சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், ஜெ. இன்று உயிருடன் இருந்திருந்தால் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றிருக்க வேண்டும் எனவும், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் என ஒ.பி.எஸ் அணிக்கு சொல்லுங்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நீதிபதி குமாரசாமி சரியான தீர்ப்பு வழங்கியிருந்தால் தற்போது பதவிக்கான போட்டி வந்திருக்காது எனவும் தமிழகத்தில் நல்லாட்சி நடந்திருக்கும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிபிட்டுள்ளார்.
