Asianet News TamilAsianet News Tamil

பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. மாணவன் பரபரப்பு பேட்டி..ராமதாஸ் கண்டனம்..

பள்ளி மாணவனை இறுக்கமாக சட்டை அணிந்து வந்ததற்காக, 20 நிமிடங்கள் கொடூரமாக தாக்கிய ஆசிரியரின் செயல் கண்டனத்திற்குரியது எனறு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Ramadoss statement about school student attack
Author
Kovai, First Published Dec 11, 2021, 9:21 PM IST

பள்ளி மாணவனை இறுக்கமாக சட்டை அணிந்து வந்ததற்காக, 20 நிமிடங்கள் கொடூரமாக தாக்கிய ஆசிரியரின் செயல் கண்டனத்திற்குரியது எனறு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கோவையில் தனியார் பள்ளி மாணவன் ஒருவர் சட்டையை இறுக்கமாக அணிந்து வந்ததற்காக ஆசிரியர் கொடூரமாக தாக்கியதில்,காயம் அடைந்த மாணவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுக்குறித்து அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், கோவை கணபதியில் உள்ள தனியார் பள்ளியில் இறுக்கமான ஆடை அணிந்ததற்காக 11-ஆம் வகுப்பு மாணவனை இயற்பியல் ஆசிரியர் 20 நிமிடங்கள் தாக்கியதில் மாணவன் கடுமையான காயங்கள் மற்றும் வலியுடன்  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

Ramadoss statement about school student attack

மேலும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டும், தவறு செய்தால் தண்டித்து நல்வழிப் படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஒரு மாணவனை 20 நிமிடங்களுக்கு மேலாக ஆசிரியர்  தொடர்ந்து தாக்குவது மனிதத்தன்மையற்ற செயல். இதை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். காயமடைந்த மாணவருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு கனிவுடன் நடந்து கொள்வது குறித்து உரிய பயிற்சிகளும், கலந்தாய்வுகளும் வழங்கப்பட வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

Ramadoss statement about school student attack

மேலும் மாணவன் கொடுத்த பேட்டியில், பள்ளி சார்பில் கொடுக்கப்பட்ட சீருடை எனக்கு சரியாக பொருந்தவில்லை. இதன் காரணமாக அதனை தைத்து இறுக்கமாக அணிந்து வந்தேன். இதற்காக தகாத வார்த்தையில் தன்னை பேசியதுடன் கொடூரமான முறையில் தன்னை அனைவர் முன்னிலையிலும் ஆசிரியர் அடித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு ஆசிரியர் தன்னை தாக்கி விட்டதாக கூறினார். 

ஆசிரியரின் இந்த கொடூர செயலை மாணவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இதுக்குறித்து மாணவனின் பெற்றோர்  சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios