Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலை.! 3 நாளில் 2 பேர் பலி.! ஆளுனர் ரவி தான் பொறுப்பு- ராமதாஸ் அதிரடி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 43 தற்கொலை செய்துள்ள நிலையில்,  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு  ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. இதில் ஆளுனர் பிடிவாதம் காட்டக்கூடாது என பா.ம.க. நிறுவனர் இராமதாசு  வலியுறுத்தியுள்ளார்.

Ramadoss said that Governor Ravi is responsible for the suicides that continue due to online gambling
Author
First Published Feb 9, 2023, 1:02 PM IST

 ஆன்லைன் சூதாட்டம்- தொடரும் தற்கொலைகள்

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து உயிரை இழக்கும் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தராமல் பல மாதங்களாக கிடப்பில் வைத்துள்ளார். இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் இரண்டு பேர் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ஈரோடு இடைத்தேர்தல்.! அழைப்பு விடுத்த எடப்பாடி.! அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்..! அண்ணாமலை அறிவிப்பு

Ramadoss said that Governor Ravi is responsible for the suicides that continue due to online gambling

3 நாளில் 2 பேர் தற்கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூரையடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்ற கூலித்தொழிலாளி  ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்  ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 43 ஆவது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 14-ஆவது தற்கொலை இது. கடந்த 3 நாட்களில் நிகழ்ந்த 2-ஆவது தற்கொலை இது . இவற்றுக்கு ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Ramadoss said that Governor Ravi is responsible for the suicides that continue due to online gambling

தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பு

தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை?  என்பது புள்ளிவிவரங்களுடன்  விளக்கப்பட்டிருக்கும் போதிலும்,  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு  ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை.இதில் ஆளுனர் பிடிவாதம் காட்டக்கூடாது! தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் இத்தகைய தற்கொலைகள் தொடர்கதையாகி விடும்.  அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசும், ஆளுனரும் தடுக்க வேண்டும்.  அதற்காக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

எடப்பாடியால் இரட்டை இலை சின்னத்திற்கான செல்வாக்கு குறைந்து விட்டது.! அதிமுகவினரை சீண்டும் டிடிவி தினகரன்
 

Follow Us:
Download App:
  • android
  • ios