Asianet News TamilAsianet News Tamil

தி.மு.க. என்பது என்ன? _______________ டேஷ் போட்ட ராமதாஸ்... கொந்தளிக்கும் திமுக உபிக்கள்...

திமுக்கண்ணா தி.மு.க. என்பது என்ன என டேஷ் போட்டு இதை நிரப்புங்கன்னு சொல்லி அறிக்கை விட்டது திமுக உபிகளை கோபத்தில் கொந்தளிக்க வைத்துள்ளது.

Ramadoss raised question against DMK
Author
Chennai, First Published Jul 15, 2019, 1:03 PM IST

வழக்கமாக திமுகவை, அதிமுகவை கிழித்து தொங்கவிடும் ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணி வைத்ததிலிருந்து அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, திமுகவை மட்டுமே காண்டாக்கினார். கழுவி கழுவி ஊத்தினார். தேர்தல் தோல்வியால் பாமகவை அதிமுக கழட்டிவிடும் விஷயம் அறிந்த அவர் அதிமுகவை விமர்சிக்க தொடங்கினார். அனால், அரசியல் சூழலை கருத்தில் கொண்டு அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தது அதிமுக. மீண்டும் அதிமுகவை விமர்சிப்பதிலிருந்து பின் வாங்கிய ராமதாஸ், மகனுக்கு கிடைத்த ஒத்த சீட்டால் மனுஷன் திமுகவை வாறு வாருன்னு வாரி வருகிறார்.

அதிலும் திமுக்கண்ணா தி.மு.க. என்பது என்ன என டேஷ் போட்டு இதை நிரப்புங்கன்னு சொல்லி அறிக்கை விட்டது திமுக உபிகளை கோபத்தில் கொந்தளிக்க வைத்துள்ளது.

சரி அப்படி என்ன சொல்லியிருக்காரு?   கோடிட்ட இடங்களை நிரப்புக:
தி.மு.க. என்பது _______ என தொடங்கிய இந்த கதையில்... சீதா பாட்டி: “சாதனை.... சாதனை... வரலாறு காணாத சாதனை. எதிரிகள் முகத்தில் கரியை பூசி விட்டோம். இதுவும் செய்வோம், இன்னமும் செய்வோம், இனம்-மொழி நலன் காக்க, எதுவும் செய்வோம், அதற்காக எமது உடல் பொருள் உயிர் அனைத்தையும் ஈவோம்”

ராதா பாட்டி: அக்கா.... என்னக்கா ஆச்சு. நேத்தி வரைக்கும் நல்லாத் தானே அக்கா இருந்தாய். இதற்கு தான் அதிகமாக மேடைப் பேச்சுகளையெல்லாம் கேட்காதே என்று சொன்னேன். இப்போ பாத்தியா உன் நிலைமை இப்படியாயிடுச்சி. அய்யய்யோ நான் இப்போ என்ன செய்வேன்?

சீதா பாட்டி: அடி முட்டாளே.... நீ வேற ஏன்டி இப்போ ஒப்பாரி வைக்கிறே. எனக்கு என்ன ஆச்சு. ஒண்ணும் ஆகலைடி. நான் நல்லாத் தான் இருக்கேன்டி.

ராதா பாட்டி: அப்படியா அக்கா. நீ ஆக்ரோஷமா முழங்கியதைப் பார்த்து நான் பயந்தே போய்விட்டேன் அக்கா.

சீதா பாட்டி: அடியேய்.... முழங்குவதற்கு நான் என்ன அரசியல்வாதியா? நாடாளூமன்றத்தில் திமுக என்ன செய்தது என்று யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக நம்ம உதயநிதியோட அப்பா ஒரு சாதனைப் பட்டியல் வெளியிட்டிருக்கிறார். அதைத் தாண்டி அப்படி சொன்னேன்.

ராதா பாட்டி: அக்கா.... சாதனையை சொன்னா பரவாயில்லை அக்கா. நீ சத்தம் தானே அக்கா போட்ட. இதுவா சாதனை?

சீதா பாட்டி: அடியே.... உதயநிதியின் அப்பாவே அதைத் தான்டி சொல்லியிருக்காரு. நீட்டுக்கு எதிரா டி.ஆர். பாலு பேசினார். அஞ்சல் துறைக்கு எதிராக தயாநிதி மாறன் பேசினார். ரயில்வே துறைக்கு எதிராக கனிமொழி பேசினார் அப்படின்னு தான் அவர் பட்டியல் போட்டிருக்கிறார்.

ராதா பாட்டி: அப்ப இது சாதனை இல்லையா?

Ramadoss raised question against DMK

சீதா பாட்டி: சொல்வது சாதனை இல்லைடி. செய்வது தான் சாதனை. 78 வருடங்களாக முடங்கிக் கிடந்த மொரப்பூர் - தருமபுரி தொடர்வண்டித் திட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி வாங்கி, ரூ.358 கோடியை உடனடியாக ஒதுக்க வைத்தாரே அன்புமணி இராமதாஸ் ... அது தான்டி சாதனை. இப்பவும் இவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வைத்திருந்தால் அது சாதனை. ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வைத்திருந்தால் அது சாதனை. பயிர்க்கடன்களையும், கல்விக் கடன்களையும் கூடவே நகைக்கடன்களையும் ரத்து செய்ய வைத்திருந்தால் அது சாதனை. அதை விடுத்து எங்காளுங்க அதை பேசினாங்க.... இதை பேசினாங்க என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு தானே.

ராதா பாட்டி: சரி விடுக்கா.... அவங்களால முடிஞ்சா செய்ய மாட்டாங்களா?

சீதா பாட்டி: என்ன முடிஞ்சா செய்றதா? கடந்த முறை அதிமுக எம்பிக்கள் 37 பேர் இருந்தாங்க. அப்ப அவங்க என்னத்த கிழிச்சாங்கன்னு சொல்லி ஓட்டு கேட்டு தான் இவங்க 37 பேர் இப்போ ஜெயிச்சிருக்காங்க. குறைந்தபட்சம் அதிமுக எம்பிக்கள் 37 பேரும் கடந்த காலத்தில் மேகதாது, காவிரி மேலாண்மை வாரியம், நீட் உள்ளிட்ட சிக்கல்களில் அவையை நடத்த விடாமல் செய்து கவனத்தை ஈர்த்தாங்க. ஆனால், திமுக உறுப்பினர்கள் அதைக் கூட செய்யவில்லை. பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசும் போது நீட், ரயில்வே, இந்தி என வார்த்தைகளை போட்டிருக்காங்க. அவ்வளவு தான்.
ராதா பாட்டி: ஏன்க்கா. அவங்க தான் 37 பேர் இருக்கிறார்கள் அல்லவா? அவையை நடத்த விடாமல் செய்து கவனத்தை ஈர்க்கலாம் அல்லவா?

Ramadoss raised question against DMK

சீதா பாட்டி: அடப் போடி பொழைக்க தெரியாதவளே.... அவர்களும் உன்னைப் போல் பொழைக்கத் தெரியாமலா இருப்பார்கள்? நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு நிலைக்குழு இருக்கும். அதன் தலைவராக இருப்பவர்களுக்கு கிட்டத்தட்ட அமைச்சர்களுக்கு இணையான அதிகாரம், வாகனம், படிகள், வரும்படிகள் உண்டு. கடந்த முறை அதிமுக சார்பில் 37 உறுப்பினர்களை வைத்திருந்தாலும் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிலைக்குழு மட்டும் தான் கிடைத்தது. ஆனால், இப்போது திமுகவுக்கு நேரடியாக 19 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதனால் சாதாரணமான துறையின் நிலைக்குழு தலைவர் பதவி தான் கிடைக்கும். ஆனால், கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் காட்டி அதிகாரம் மிகுந்த ரயில்வே, கப்பல் துறை ஆகிய இரு நிலைக்குழு தலைவர் பதவியை கைப்பற்றத் துடிக்கிறதாம் திமுக. அவையில் அமளி செஞ்சா எதுவும் கிடைக்காது இல்லையா.... அதான் பம்முறாங்களாம்.

ராதா பாட்டி: அப்போ.... இவங்க பாயாத புலின்னு சொல்லுங்க.

சீதா பாட்டி: அவங்களோட இன்னொரு மோசடியும் வெளியில் வந்திருக்கிறதுடி. ஐ.நா. துணைப் பொதுச்செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஜான் எலியாசன் என்பவர் ‘நான் வியந்த உலகத் தலைவர்கள்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியதாகவும், அதன் 372&ஆவது பக்கத்தில் ‘‘ நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர். அவர் என்னிடம் தொடர்ந்து ஒரு மணி நேரம் மக்கள் பிரச்சினைகள் குறித்தே பேசினார். நீண்டகால அரசியல் திட்டங்கள் குறித்த அவரின் பேச்சுக்களை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பெடுத்து, அதனை இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். இப்படிப்பட்ட ஒரு தலைவர் மற்ற நாடுகளில் இருந்திருந்தால் அவரை உலகமே தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கும்’’னு குறிப்பிட்டிருந்ததாக உ.பி.க்கள் சமூக வலைத்தளங்களில் கதை விட்டு வந்தார்களாம். இதை ஒருவர் ஜான் எலியாசனின் கவனத்துக்கு கொண்டு செல்ல, அவரோ, மு.க.ஸ்டாலின்னு ஒருத்தரை நான் கேள்விப்பட்டதே இல்லை. அத்தனையும் பொய் என்று கூறி விட்டாராம். இப்போது அவமானப்பட்டு நிற்கிறார்கள் திமுகவினர்.

ராதா பாட்டி: அய்யோ இந்த தில்லுமுல்லு எல்லாம் தேவையா அக்கா?

சீதா பாட்டி: அதனால் தான்டி அது தி.மு.க! இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios