Asianet News TamilAsianet News Tamil

சொன்னதை செய்து கெத்து காட்டிய ராமதாஸ்... கலாய்க்க காத்திருந்த கட்சிகளுக்கு ஷாக்!!

நேற்று தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் ராமசாமி படையாட்சியார் உருவப் படத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் ராமதாஸ் பங்கேற்பார் என எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் கடைசி வரை அவர் வரவே இல்லை, காரணம் பாமகவை தொடங்கிய சமயத்தில் அளித்த ஒரு வாக்குறுதியில்  எந்த காரணத்தைக்கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ படாது என அறிவித்திருந்தார். 
 

Ramadoss proof for wote letter
Author
Chennai, First Published Jul 20, 2019, 3:19 PM IST

நேற்று தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் ராமசாமி படையாட்சியார் உருவப் படத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் ராமதாஸ் பங்கேற்பார் என எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் கடைசி வரை அவர் வரவே இல்லை, காரணம் பாமகவை தொடங்கிய சமயத்தில் அளித்த ஒரு வாக்குறுதியில்  எந்த காரணத்தைக்கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ படாது என அறிவித்திருந்தார். 

அவர் சொன்னது போலவே வரவில்லை, ஏற்கனவே எங்கள் குடும்பத்திலிருந்து யாரேனும் அரசியலுக்கு வந்தால் என்னை முச்சந்தியில் நிற்கவைத்து சவுக்கால் அடியுங்கள் என பேசிவிட்டு அன்புமணியை நாடாளுமன்றம் மத்திய அமைச்சர் என பதவி வாங்கி கொடுத்ததை மறக்காமல் கலாய்த்து தள்ளிக்கொண்டிருப்பதால், இப்போது சட்டமன்றம் சென்றால் கழுவி கழுவி ஊத்துவார்களே என யோசித்து நின்றுவிட்டதாக சொல்லப்படுகிறது

இதுகுறித்து முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில்,   "அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்! உழைப்பாளர் மக்கள் கட்சியின் நிறுவனரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு திறக்கும் விழாவிற்கான சட்டப் பேரவைச் செயலாளரின் அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க நன்றி! வாழ்நாளில் சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்தில் ஓர் அடி எடுத்து வைக்க மாட்டேன் என்று உறுதி ஏற்று, அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

ராமசாமி படையாட்சியார் உரிமைகள் அற்று கிடந்த ஊமை ஜனங்களுக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்தவர், போராடியவர். அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் சட்ட பேரவை மண்டபத்தில் அவரது உருவப்படத்தை திறப்பது அவருக்கு செய்யப்படும் சரியான அங்கீகாரம் ஆகும். இதற்காக தங்களுக்கு பாமக சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தாங்கள் தான் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருந்தீர்கள். அதுமட்டுமின்றி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அவரது உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான அடிக்கல்லையும் கடந்த ஆண்டு நட்டு வைத்தீர்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பெரியவர் ராமசாமி படையாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொடர்ச்சியாக அவரது திருவுருவ படமும் சட்டப் பேரவை மண்டபத்தில் திறக்கப்படுவது அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. ராமசாமி படையாச்சியார் உருவ படம் திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற பாமக சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என இவ்வாறு ராமதாஸ் அதில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios