நாட்டையும், வீட்டையும், உடல்நலத்தையும் காக்க தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே தீர்வு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

தருமபுரம் ஆதீன கல்லூரி மாணவிகள் 4 பேர் மது அருந்திய காணொலி  வெளியாகி அவர்களை கல்லூரி நிர்வாகம் நிரந்தரமாக நீக்கம் செய்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘’தருமபுரம் ஆதீன கல்லூரி மாணவிகள் 4 பேர் மது அருந்திய காணொலி வெளியானதும், அதற்காக அவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் வருங்காலத் தூண்களை மது எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம்  தேவையில்லை!

திரும்பிய திசையெல்லாம் மது தாராளமாக கிடைப்பது தான் மாணவிகள் மது அருந்துவதற்கு காரணம் ஆகும். சிறுவர்கள் கூட சீரழிவதற்கு தெருவெங்கும் மதுக்கடைகள் இருப்பது தான் காரணம். நாட்டையும், வீட்டையும், உடல்நலத்தையும் காக்க தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே தீர்வு’’எனத் தெரிவித்துள்ளார்.