திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசி பல நாட்களாகியும் அதனை மறக்காமல் அவ்வப்போது நினைவூட்டி வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஊடகத்துறையினருக்கு சமர்ப்பணம்: பாரதி உதிர்த்த முத்து, ’’இந்த டிவிகாரனுங்க இருக்கிறானுங்க பாருங்க, அவனுங்க மாதிரி அயோக்கியனுங்க உலகத்துல வேறு எவனும்  கிடையாது. ரெட்லைட் ஏரியா போன்று தான்  டிவிய நடத்துறானுங்க. காசுக்காக எதைப்பற்றி வேண்டுமானாலும் கிளப்பி உடுவானுங்க.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை தொடங்கும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் தேர்வுகளில் சாதனை படைத்து வாழ்க்கையில் புதிய உச்சங்களைத் தொட மாணவச் செல்வங்களை வாழ்த்துகிறேன்.

தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகள் பாதுகாக்காவிட்டால் அந்த ஆற்றை வரைபடத்தில்  மட்டும் தான் பார்க்க முடியும் என்று மதுரை உயர்நீதிமன்றம் கூறியிருப்பது மிகவும் சரியானது.  இந்த யதார்த்தத்தை, எச்சரிக்கையை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உயர்நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன். 

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி 2017-ஆம் ஆண்டு ஜூலை 1,2 தேதிகளில் மருத்துவர் அன்புமணி தாமிரபரணி ஆறு உருவாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகளை தொகுத்து தவழ்ந்தாய் வாழி தாமிரபரணி என்ற தலைப்பில் புத்தகமாக தயாரித்து, செல்லும் வழியெங்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வழங்கினார்’’ எனத் தெரிவித்துள்ளார்.