ஆந்திராவின் நலனுக்காக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஒப்பிட்டு தமிழக ஆட்சியாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய பாஜக மறுத்த காரணத்தால், பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் கட்சி முறித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தீர்மானித்துள்ளது. ஏற்கனவே ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் அளித்துள்ளது.

மாநில நலனுக்காக சந்திரபாபு நாயுடுவின் அதிரடியான நடவடிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தமிழக ஆட்சியாளர்களையும் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் பதிவிட்டுள்ள டுவீட்டில், காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் எல்லாம் கொண்டுவர வேண்டாம். குறைந்தபட்சம், அவர்களுக்கு ஆதரவாவது தெரிவிக்கலாமே? என பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதைக் கண்டித்து அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டாம். குறைந்தபட்சம் ஆந்திரக் கட்சிகள் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கலாமே, செய்வார்களா?</p>&mdash; Dr S RAMADOSS (@drramadoss) <a href="https://twitter.com/drramadoss/status/974510868388982784?ref_src=twsrc%5Etfw">March 16, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

மேலும், ஆந்திராவில் முதுகெலும்புள்ள தலைவர்கள், மாநிலத்துக்காக போராடுகின்றனர். நமது அடிமை ஆட்சியாளர்கள், சொத்துக்களை காக்க போராடுகின்றனர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">ஆந்திர உரிமையைக் காக்க மத்திய அரசுக்கு எதிராக ஜெகன் ரெட்டி நம்பிக்கையில்லாத் தீர்மானம். சந்திரபாபு நாயுடு ஆதரவு: செய்தி- அவர்கள் முதுகெலும்புள்ள தலைவர்கள். மாநிலத்துக்காக போராடுகின்றனர். நமது ஆட்சியாளர்கள் அடிமைகள். சொத்துக்களைக் காக்க போராடுகின்றனர்!</p>&mdash; Dr S RAMADOSS (@drramadoss) <a href="https://twitter.com/drramadoss/status/974510914455052288?ref_src=twsrc%5Etfw">March 16, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>