Asianet News TamilAsianet News Tamil

15 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது..! சிங்களப் படையினரின் அத்துமீறல்களுக்கு முடிவு எப்போது- ராமதாஸ் ஆவேசம்


ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 15 மீனவர்கள் கைது செய்துள்ள சிங்களப் படையினரின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Ramadoss condemned the arrest of 15 Rameswaram fishermen by the Sri Lankan Navy
Author
First Published Nov 6, 2022, 12:59 PM IST

தமிழக மீனவர்கள் கைது

ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

 

சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது!  சிங்களப் படையினரால் கடந்த 27-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள்  இன்னும் விடுவிக்கப்படவில்லை. 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு இரு நாட்கள் முன் விடுவிக்கப்பட்ட 3 மீனவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. அதற்குள்ளாக அடுத்த அத்துமீறல் நடந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். 

நள்ளிரவில் விபத்துக்குள்ளான சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்..! பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு..

Ramadoss condemned the arrest of 15 Rameswaram fishermen by the Sri Lankan Navy
 மத்திய அரசு எச்சரிக்கை ?

மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக அரசும், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்து வருகின்றன; இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகும்  தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு இந்திய அரசு எப்போது முடிவு கட்டப் போகிறது? இப்போது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும், ஏற்கனவே சிறைபட்ட 7 பேரையும் உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை  இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அவதூறுகளை அள்ளிவீசி உண்மையை மறைக்க சி.வி.சண்முகம் திட்டம்..? இறங்கி அடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Follow Us:
Download App:
  • android
  • ios