Asianet News TamilAsianet News Tamil

பேரதிர்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்... தேற்றும் பாமக ராமதாஸ்..!

2.1 கி.மீ இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை பெறுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Ramadoss comforts ISRO scientists
Author
Tamil Nadu, First Published Sep 7, 2019, 10:57 AM IST

2.1 கி.மீ இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை பெறுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.Ramadoss comforts ISRO scientists

நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கி.மீ தொலைவில் விக்ரம் லேண்டர் நெருங்கி வந்த நிலையில் சிக்னல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சந்திரயான்-2 -வின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு நிலவை ஆய்வு செய்யும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். லேண்டரின் சிக்னல் கிடைக்காததால் சந்திரயான் -2 திட்டமே தோல்வி எனக் கருத முடியாது. ஆர்பிட்டர் 95 சதவிகித பணி செய்யும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.Ramadoss comforts ISRO scientists

இது தொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. பின்னடைவை சந்திக்காத விண்வெளி ஆராய்ச்சி உலகில் ஏதுமில்லை. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் முயற்சி போற்றத்தக்கது.Ramadoss comforts ISRO scientists

சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. பின்னடைவை சந்திக்காத விண்வெளி ஆராய்ச்சி உலகில் ஏதுமில்லை. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் முயற்சி போற்றத்தக்கது.Ramadoss comforts ISRO scientists

2.1 கி.மீ இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை சுவைப்பர். சாதாரண மனிதனுக்கும் நிலவு ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை சந்திரயான் -2 ஏற்படுத்தியுள்ளது. நிலவை நெருங்கும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும்’’ என அவர் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios