Asianet News TamilAsianet News Tamil

துரைமுருகன் முதுகில் குத்தப்பட்டார்? ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

வன்னியத் தலைவர்கள் எப்படி முதுகில் குத்தப்பட்டார்? என்பவை எல்லாம் ஊரறிந்த வரலாறு. இது ஸ்டாலினுக்கே தெரியும் என ராமதாஸ் பல்வேறு பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Ramadoss Angry against MK Stalin
Author
Chennai, First Published Apr 2, 2019, 6:12 PM IST

ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சித் ன்னியத் தலைவர்கள் எப்படி முதுகில் குத்தப்பட்டார்? என்பவை எல்லாம் ஊரறிந்த வரலாறு. இது ஸ்டாலினுக்கே தெரியும் என ராமதாஸ் பல்வேறு பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் சட்டக்கல்லூரி தொடங்க உலகத்தரம் கொண்ட கட்டமைப்பு வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டது. தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன், தேவைக்கும் அதிகமாகவே சட்ட நூல்களும் வாங்கப்பட்டன. ஆனால், பாமகவின் ஆதரவில் செயல்பட்டாலும் இந்த சட்டக்கல்லூரிக்கு திமுக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரிக்கு அனுமதி வழங்கும் படி மொத்தம் 3 முறை திமுக அரசுக்கு ஆணையிட்டது. 

Ramadoss Angry against MK Stalin

அப்போதைய முதல்வர் கருணாநிதியும் அனுமதி வழங்க வாய்மொழியாக உத்தரவிட்டார். ஆனால், அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலினும், அவரது துதிபாடிகள் கூட்டமும் சேர்ந்து கொண்டு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தனர். 

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் சட்டக்கல்வி பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டக்கல்லூரியை தொடங்கவிடாமல் தடுத்த ஸ்டாலின் தான் இப்போது வன்னிய மக்களுக்காக நீலிக்கண்னீர் வடிக்கிறார். திமுகவின் தூண்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி ராமச்சந்திரன், ஏ.ஜி. சம்பத் உள்ளிட்ட வன்னிய சமுதாய தலைவர்கள் ஸ்டாலின் மற்றும் அவரது துதிபாடிகளால் எப்படியெல்லாம் அவமதிக்கப்பட்டார்கள்; எப்படி எல்லாம் குமுறினார்கள் என்ற வரலாறு திமுகவில் உள்ள வன்னியர்களுக்கு தெரியும்.

இப்போதும் திமுகவில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீரபாண்டி ராஜா ஆகியோர் தொடர்ந்து அவமதிக்கப்படும் போதிலும், அவற்றை சகித்துக் கொண்டிருக்கின்றனர், திமுக பொருளாளர் துரைமுருகன் இப்போதும் எப்படி முதுகில் குத்தப்பட்டார்? என்பவை எல்லாம் ஊரறிந்த வரலாறு.

Follow Us:
Download App:
  • android
  • ios