Asianet News TamilAsianet News Tamil

இனிமே தான் கிளைமாக்ஸே இருக்கு, ஆக்ஷன் படம் பார்க்கப் போறோம்... ஒத்த சீட்டு கெடச்ச ஜோரில் திமுகவை வெறுப்பேத்தும் ராமதாஸ்!!

ட்விட்டரில் இரண்டே வரியில் நடப்பு அரசியலை கலாய்த்து தள்ளுவார் ராமதாஸ். எப்போதாவது ரொம்ப குஷியாக இருந்தால் சீதா பாட்டி, ராதாப்பாட்டி என்ற தலைப்பில் பாட்டி கதை சொல்லி வரும் அந்த சமயத்தில் உள்ள ட்ரெண்டிங்கான மேட்டரை வைத்து கலாய்க்கும் அவர் இன்று திமுக  எம்பிக்களை கலாய்த்துள்ளார்.

ramadas wrote and troll dmk happy mood
Author
Chennai, First Published Jul 6, 2019, 4:36 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ட்விட்டரில் இரண்டே வரியில் நடப்பு அரசியலை கலாய்த்து தள்ளுவார் ராமதாஸ். எப்போவாவது குஷியாக இருக்கும் சமயத்தில் சீதா பாட்டி, ராதாப்பாட்டி என்ற தலைப்பில் பாட்டி கதை சொல்லி வரும் அவர், அந்த சமயத்தில் உள்ள ட்ரெண்டிங்கான மேட்டரை வைத்து கலாய்ப்பார். இன்று மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் 2 வேட்பாளர்களை அறிவித்தனர்.

அதில், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு மற்றுமுள்ள ஒரு இடம் ஒதுக்கப் படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்  என அதிமுக அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை பார்த்த குஷியில் இருக்கும் ராமதாஸ்  இன்று திமுக எம்பிக்களை கலாய்த்துள்ளார்.

அந்த உரையாடலில்... சீதா பாட்டி: “ஏமாறச் சொன்னது நானோ, என் மீது கோபம் தானோ மனம்மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ”

ராதா பாட்டி: என்னக்கா... ரொம்ப உற்சாகமா இருக்கே. பாட்டெல்லாம் பாடி பிரமாதப்படுத்துறே?

சீதா பாட்டி: அட... நீ வேறடி. இது அழுவுறதா.... சிரிக்கிறதான்னு தெரியாத விஷயம்டி.

ராதா பாட்டி: அப்படி என்னக்கா விஷயம்.

சீதா பாட்டி: அது வேற ஒன்றும் இல்லைடி. மக்களவைக்கு தேர்தல் வந்துச்சா. அதுல போட்டியிட்ட சூரிய கட்சி புதுப்புரளி ஒன்றை அவிழ்த்து விட்டது. அது என்னன்னா.... மக்களவைத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்றால் வங்கிகளில் விவசாயத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து கடனாகப் பெறப்பட்ட தொகை முழுவதும் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு ரூ.72,000 நிதி உதவி, கல்விக்கடன், வேளாண் கடன் தள்ளுபடி என வாயில் வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி விட்டாங்க. மக்களும் அதை நம்பி ஏமாந்து அவங்களுக்கு ஓட்டு போட்டாங்க.

ராதா பாட்டி: அது தான் தெரியுமே அக்கா. நீ பாடுன பாட்டுக்கும், இதுக்கும் என்னக்கா சம்பந்தம்?

சீதா பாட்டி: அடியே ட்யூப் லைட்டு. எல்லாத்தையும் உனக்கு உடைச்சு தான் சொல்லணுமா. மேலோட்டமா சொன்னா புரியாதா?

ராதா பாட்டி: கோபப்படாம சொல்லுக்கா!

ramadas wrote and troll dmk happy mood

சீதா பாட்டி: சொல்றேன் பொறுடி. சூரியக் கட்சி வாக்குறுதி கொடுத்ததும், ஜெயிச்சதும் மட்டும் தான் உனக்கு தெரியும். அதுக்கு இடையில நடந்தது உனக்கு தெரியாது. ரூபாய்க்கு 3 படி அரிசின்னு ஆரம்பித்து இப்போது வரை பொய்யிலேயே அரசியல் நடத்தும் அந்த கட்சியினர் நகைக்கடனையெல்லாம் தள்ளுபடி செய்யப்போவதாக வாக்குறுதி அளித்ததும், அதை நம்பிய மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த 3 பவுன் முதல் 6 பவுன் வரையிலான நகைகளை வங்கிகளில் அடகு வைத்து, ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கடன் வாங்கி, அதில் பெரும் பகுதியை செலவழித்தும் விட்டார்களாம்.

ராதா பாட்டி: ஆமாமாம். அதுதான் எனக்கு தெரியுமே.

சீதா பாட்டி: அடியே... நான் என்ன என்.எஸ்.கே - மதுரம் ஜோடி உப்புமா கிண்டிய கதையையா சொல்றேன். ஒவ்வொரு விஷயத்தையும் நான் சொன்ன பிறகு அதுதான் எனக்கு தெரியும், அது தான் எனக்கு தெரியும்னு சொல்றே. அப்ப அடுத்தது என்னன்னு சொல்லேன் பார்ப்போம்.

ramadas wrote and troll dmk happy mood

ராதா பாட்டி: அது மட்டும் தான்க்கா தெரியலை.

சீதா பாட்டி: சரி, சரி... குறுக்க பேசாமல் நான் சொல்றத மட்டும் கேளூ.

ராதா பாட்டி: சரிக்கா.

சீதா பாட்டி: ‘கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல’ என்பதைப் போல சூரியக் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிக இடத்தில் ஜெயிச்சாலும், அதிகாரத்தில் அருகில் கூட நெருங்க முடியல. ஜெயிச்சவங்களும் தாங்கள் செலவழிச்சதுல கொஞ்சத்தையாவது எடுத்து விடணும் என்பதற்காக தில்லியில் அதிகார வட்டங்களை சுத்தி சுத்தி வர்றாங்க. அவங்களுக்கு மக்களைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை. ஆனால், ஓட்டு போட்ட மக்களோ, சூரியக் கட்சியும், கூட்டணி கும்பலும் சொன்ன வாக்குறுதியை நம்பி நகைகளை அடகு வைத்து நாசமா போயிட்டோமே? என்று புலம்பிக் கொண்டிருக்காங்களாம்.

ramadas wrote and troll dmk happy mood

ராதா பாட்டி: ஓஹோ.... அதுக்கு தான் சிம்பாலிக்கா, ‘‘ ஏமாறச் சொன்னது நானோ’’ என்று பாட்டு பாடினீர்களா?

சீதா பாட்டி: இப்பவும் நீ முந்திரிக்கொட்டை போலத் தான் பேசுற. ஏமாறச் சொன்னது நானோன்னு பாடியது நானில்லை. வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் தானாம்.

ராதா பாட்டி: அப்படியா?

சீதா பாட்டி: அட ஆமாண்டி. நகையை அடகு வைத்தவர்களும், கல்விக் கடன் தள்ளுபடி ஆகிவிடும் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களும் மக்கள் பிரதிநிதிகளை நேரில் சந்திச்சி வாக்குறுதிகள் என்ன ஆச்சி எனக் கேட்டார்களாம். ஆனால், அவர்களோ.... ‘‘நாங்க மட்டும் தான் ஜெயிச்சோம்... எங்க கூட்டணி ஜெயிக்கவில்லையே. அதனால நாங்களே போட்ட முதலை எடுக்க முடியாம தவித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்று புலம்புகிறார்களாம்.

ramadas wrote and troll dmk happy mood

ராதா பாட்டி: அது சரிக்கா. அவங்க கவலை அவங்களுக்கு.

சீதா பாட்டி: இருடி.... இனிமே தான் கிளைமாக்ஸே இருக்கு.

ராதா பாட்டி: அது என்னக்கா?

சீதா பாட்டி: புலம்பிய மக்கள் பிரதிநிதிகளை சுத்தி வளைச்ச மக்கள், உங்களால் தான் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியல. இந்த அரசிடமாவது நிறைவேத்த சொல்லி வலியுறுத்தலாம் இல்லையா. அதை விட்டுட்டு தில்லிக்கு போய் வெட்டியா சீன் போட்டுகிட்டு இருக்கிறீங்களே என ஆவேசமாகிட்டாங்களாம். அதைக் கேட்டு கோபமடைந்த மக்கள் பிரதிநிதிகள், ‘‘நாங்க வாக்குறுதி கொடுத்தது உண்மை தான். அதை நம்பி உங்களை யாரு ஓட்டுப் போட்டு ஏமாறச் சொன்னாங்க’’ என்று கடுப்படித்தார்களாம்.

ராதா பாட்டி: அய்யய்யோ.... அப்படியா? அப்ப அந்த பாட்டை எடுத்துக் கொடுத்தது மக்கள் பிரதிநிதிகள் தானா?

சீதா பாட்டி: ஆமாம்டி. மக்கள் பிரதிநிதிகளின் திமிர் பேச்சைக் கேட்டு பொதுமக்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்களாம். ஊருக்குள் நம்மைத் தேடி வரும்போது ஓட, ஓட விரட்டுவோம் என சபதம் எடுத்திருக்கிறார்களாம்.

ராதா பாட்டி: அப்படியா.... சரி விடுக்கா. முதலில் ஒரு பாட்டு கேட்டோம். அடுத்து இப்போ ஒரு ஆக்ஷன் படம் பார்க்கப் போறோம் என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios