ராம அவதாரங்களையும், கிருஷ்ண அவதாரங்களையும்,  இன்னும் பிற அவதாரங்களையும், கடுமையாக விமர்சித்தாரே தவிர, அவரே செருப்பால் அடித்தார் என்பது ஏற்புடையதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’தந்தை பெரியார் அவர்கள் என்ன போராட்டம் நடத்தினார்? என தீர்மானங்களை நிறைவேற்றினார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. நிறைய வெளியீடுகள் உள்ளன. திராவிடர் கழகம், திகவிலிருந்து பிரிந்து தனித்து இயங்கக்கூடிய வேறு சில இயக்கங்கள், திராவிடர்கழகத்தில் இல்லாமல் பெரியாருடன் உடனி இருந்து பணியாற்றியவர்கள்,  என்று பலதரப்பட்டவர்கள் அந்த ஆதாரங்களை எல்லாம் திரட்டி,  நூலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

தயவு செய்து ரஜினிகாந்த் அவர்கள் வெறும் துக்ளக் ஆதாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு சவால் விடாமல், அந்த வெளியீடுகள் குறிப்பாக போராட்டங்கள் குறித்த பெரியாரின் பதிவுகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றையும் ரஜினி வாங்கி புரட்டிப்பார்க்க வேண்டும்.  பெரியார் கடுமையான விமர்சனங்களை வைக்கக்கூடியவர். ஆனால், மென்மையாக அணுகக்கூடியவர்.

 

ராஜாஜி அவர்களுடன் கொள்கை ரீதியான மோதல் அவருக்கு உண்டு. ஆனால் இருவக்கும் இடையில் நாகரீகமான நட்பு இருந்தது.  ஒது நாடறிந்த உண்மை. அதேபோல் மூடநம்பிக்கைகளை கடுமையாக எதிர்க்கிற பெரியார், குன்றக்குடி அடிகளாரை சந்திக்க சென்றபோது அவர், திருநீரு பூசி வரவேற்றதை மனமுவந்து ஏற்றுக்கொண்டவர் பெரியார். 

அப்படிப்பட்டவர் ராம அவதாரங்களையும், கிருஷ்ண அவதாரங்களையும்,  இன்னும் பிற அவதாரங்களையும், கடுமையாக விமர்சித்தாரே தவிர, அவரே செருப்பால் அடித்தார் என்பது ஏற்புடையதல்ல. அதற்கு எந்த ஆதரமும் இல்லை. அதற்கு நடிகர் ரஜினிகாந்த அவர்கள், அவுட் லுக், துக்ளக் பத்திரிக்கைகளில் வந்ததை மட்டும் ஆதாரமாக பார்க்காமல் அதிகாரப்பூர்வமான வெளியீட்டாளர்களின் பதிவுகளை அவர் புரட்டிப்பார்க்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்வதாக கூறினார்.

அவரது பேச்சில் பெரியார் ராமர் சிலைகளை அடிக்கவில்லை. அந்தப்பேரணியில் சென்ற மற்றவர்கள் ராம, கிருஷ்ண அவதாரங்களின் உருவத்தை செருப்பால் அடித்திருக்கலாம் என்கிற ரீதியில் பேசியிருப்பதாக உன்னிப்பாக கவனிப்பவர்கள் கூறுகின்றனர். இவரது பேச்சு ரஜினி படத்தில் வரும், ‘’ மாப்பிள்ளை அவரு தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையதில்ல’’என்கிற காமெடியை நினைவூட்டுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.