ராம.கோபாலன், இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி..நலம்பெற்ற கி.வீரமணி வாழ்த்து.!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் ராமகோபாலன், இலகணேசன் இருவரும் விரைவில் நலம்பெற்று பணி தொடரவேண்டும் என தி.க.தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் ராமகோபாலன், இலகணேசன் இருவரும் விரைவில் நலம்பெற்று பணி தொடரவேண்டும் என தி.க.தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை:
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைகிறோம். அவர் விரைவில் நலமடைந்து மீண்டும் பொதுப் பணியைத் தொடரவேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.ஏற்கெனவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலனும் நலம் பெற்று மீண்டும் தம் பொதுவாழ்வைத் தொடரவேண்டும் என்றும் விரும்புகின்றோம்.கொள்கை மாறுபாடுகள் மனிதநேயத்திற்கு ஒருபோதும் தடையாக இருக்கவே கூடாது.