ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மொத்த அயோத்தி நகரமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அயோதி புறப்பட்டார்.காலை  10:30 மணிக்கு அவர் லக்னோ வந்து, அங்கிருந்து அயோத்தி வரவுள்ளார். பின்னர் அங்கிருந்து அனுமன் கோவிலுக்கு செல்லும் அவர், அங்கே சாமி தரிசனம் முடித்துவிட்டு ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். 12:30 மணிக்கு விழா தொடங்க உள்ள நிலையில், மோடியுடன் சேர்த்து  4 பேர் மட்டுமே மேடையில் அமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் நிகழ்ச்சி முடித்து 1 மணிக்கு கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 2 மணியளவில் லக்னோ புறப்படும் அவர் 2:20 மணிக்கு லக்னோவில் இருந்து டெல்லி புறப்படுகிறார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

கடந்தாண்டு நவம்பர் மாதம் 9-தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது, கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதேபோல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்திரப்பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்திற்கு ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.  இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது, அறக்கட்டளையின் மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று  பாரத பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலுக்கு அஸ்திவாரம் போட உள்ளார். இது இந்துக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காலை 9:30 மணிக்கு டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில்  மோடி புறப்பட்டார் 10.30 க்கு லக்னோ வந்தடைய உள்ளார். 

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி  வந்து, அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மொத்த அயோத்தி நகரமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதில் வெறும் 175 பேருக்கு மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 135 பேர் ஆன்மிகத் தலைவர்கள் ஆவர், அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி,  ஆனந்திபென் படேல், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கோயில் அறக்கட்டளை  நிர்வாகி நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அயோத்திக்கு பிரதமர் மோடி வரவுள்ள நிலையில், நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விழா நடக்கும் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதற்காக 40 கிலோ வெள்ளி செங்கல் தயார் நிலையில் உள்ளது. தற்போது அடிக்கல் நாட்டு விழா அயோத்தியில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரப்பிரதேச மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடதக்கது.