ஆகஸ்ட் 15 போல், ராமர் கோயில் எழுப்ப வேண்டும் என்று போராடி வந்தவர்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள். அயோத்தியின் பொருளாதாரத்தில் ராமர் கோயில் முக்கிய பங்கு வகிக்கும். ஆகஸ்ட் 5ஆம் தேதி ஒரு பொன்னாள் ஆகும். ராம ஜென்ம பூமி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது என்று பேசியிருந்தார் பிரதமர் மோடி. அடிக்கல் நாட்டப்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது தான் ஹைலைட்டான விசயம். இதன் முதல் பிரசாதம் ஒரு தலித் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பாபர் மசூதி நிலத்தை ராம ஜென்மபூமிக்கு வழங்கவும், ராம் ஜன்மபூமி வளாகத்தை விட்டுத் தனியாக ஐந்து ஏக்கர் நிலத்தை மசூதிக்கு வழங்கவும், ராமர் கோயில் கட்ட மூன்று மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்கவும் 2019 நவம்பர் 9 ஆம் தேதி ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.பிரதமர் நரேந்திர மோதி 2020 பிப்ரவரி 5 ஆம் தேதி மக்களவையில், நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ராமர் கோயில் கட்ட, ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை என்ற தன்னாட்சி அமைப்பை அமைப்பதாக அறிவித்தார்.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, தேர்தல் ஆணையம், 72 மணி நேர தடை விதித்தது. அப்போது, அயோத்தியில் மஹாவீர் வீட்டில் தான், யோகி ஆதித்யநாத் தங்கி, உணவு சாப்பிட்டார். இதை மனதில் கொண்டே, மஹாவீருக்கு முதல் பிரசாதத்தை யோகிஆதித்யநாத் வழங்கியுள்ளார்.

அயோத்தியில் நடந்த ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா முடிந்த பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. லட்டு, துளசிதாசர் எழுதிய, 'ராமசரிதமானஸ்' புத்தகம், துளசி மாலை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில், முதல் பிரசாதம், அயோத்தியில் வசிக்கும் மஹாவீர் என்ற தலித் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

 ''அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது. முதல் பிரசாதம் எங்களுக்கு கிடைத்தது, பெரு மகிழ்ச்சியாக உள்ளது. ''என்னை நினைவில் வைத்து, முதல் பிரசாதத்தை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மாநிலத்தில், ஜாதி வேறுபாடுகள், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மறையும்,'' என்றார்.மகாவீர்.