மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் ராஜ்யசபா, தொமுச பொதுச்செயலாளர் கே.சண்முகம் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. 

தொமுச பொதுச் செயலாளராக இருக்கும் சண்முகம் ராஜ்யசபா எம்.பி. ஆவது கடந்த மாதமே உறுதியாகிவிட்டது. இதனை அவரை நேரில் அழைத்து ஸ்டாலினே கூறிவிட்டார். எஞ்சிய ஒரு இடத்திற்கு தான் கடும் போட்டி நிலவியது. திமுக வழக்கறிஞர் வில்சன் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் சமாதியை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுத் தந்தது வில்சன் தான். கடந்த ஓராண்டில் பல்வேறு வெற்றிகளை ஸ்டாலின் பெற்றாலும் தந்தையை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மூலம் பெற்ற வெற்றி தான் அவருக்கு பிரதானமாக தெரிகிறது. எனவே அந்த வெற்றிக்கு காரணமான வில்சனை கவுரவிக்கும் பொருட்டு ராஜ்யசபா எம்.பி.யாக்க முடிவு செய்துள்ளது.

திமுக சார்பில் 3 ராஜ்யசபா எம்பிக்கள் தேர்தெடுக்கப்பட உள்ளனர். மீதமுள்ள ஒரு சீட் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ளது.