Rajya Sabha Election 2022 LIVE Updates:கர்நாடக தேர்தல்: பாஜகவின் 'பி' டீம் காங்கிரஸ்: குமாரசாமி கதறல்
சுருக்கம்
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதியை கடந்த மாத இறுதியில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, இன்று தேர்தல் நடக்கிறது. 41 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். ஆனால், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி தனது உண்மையான முகத்தை காண்பித்துவிட்டது என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்டி குமாரசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் 4 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் வெற்றி உறுதியாகிவிட்டது, 4-வது இடத்துக்குதான் கடும்போட்டி நிலவுகிறது. 119 எம்எல்ஏக்களுடன் பாஜக வலுவாக இருப்பதால் 2 எம்பிக்கள் கிடைப்பது உறுதி, ஒரு எம்.பி. பதவி காங்கிரஸுக்கு செல்லும். 4-வது இடம் யாருக்கு என்பதில் இழுபறி நீடிக்கிறது.
மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த ஜேடிஎஸ் எம்எல்ஏ ஸ்ரீனிவாச கவுடாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது, “ நான் காங்கிரஸ்கட்சிக்குத்தான் வாக்களித்தேன். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியை எனக்குப் பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஹெச்டி குமாரசாமி அளித்த பேட்டியில் “ ஸ்ரீனிவாச கவுடா காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார் என முன்பே தெரிவித்திருந்தேன். ஜேடிஎஸ் கட்சிக்கும் ஸ்ரீனிவாஸ் வாக்களிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி இன்று தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்திவிட்டது. காங்கிரஸ் பாஜகவின் பி டீம். இந்தியாவில் பாஜக வளர்வதற்கு காரணமாகமுக்கியக் குற்றவாளி காங்கிரஸ்தான்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
03:25 PM (IST) Jun 10
மகாராஷ்டிரா தேர்தலில் குழப்பம்: பாஜக திடீர் போர்க்கொடி
மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. இதில் மகாவிகாஸ் அகாதி கூட்டணி வேட்பாளர்கள் 3 பேரின் வாக்கை நிறுத்திவைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
பாஜக வாக்குப்பதிவு ஏஜென்ட் பராக் அலாவானி கூறுகையில் “ காங்கிரஸ் எம்எல்ஏ யசோமதி தாக்கூர், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ஜிதேந்திர ஆவாத், சிவசேனா எம்எல்ஏ சுஹாஸ் காண்டே ஆகியோர் தங்களின் வாக்குச்சீட்டை தங்களின் கட்சி ஏஜென்டிடன் காண்பித்தனர். இது தேர்தல் விதிகளை மீறியது. அவர்கள் தங்களின் ஏஜென்டிடன் காண்பிக்கலாமேத் தவிர கட்சி ஏஜென்டிடன் காண்பிக்கக்கூடாது. அவர்களின் வாக்குச்சீட்டைதரவும் கூாடது. ஆதலால், 3 பேரின்வாக்கை நிறுத்தி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
02:10 PM (IST) Jun 10
அரசியல் கட்சி வாரியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 41 எம்.பிக்கள்
15 மாநிலங்களில் காலியாகி இருக்கும் 57 இடங்களுக்கான மாநிலங்கவைத் தேர்தல் நடந்து வருகிறது. இதில் ஏற்கெனவே 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு வெற்றி பெற்றுவிட்டனர். ஆகவே 16 உறுப்பினர்களின் வெற்றியை எதிர்பார்த்துதான் மாநிலங்களவைத் தேர்தல் பரபரப்பாக நகரப் போகிறது. கட்சி வாரியாக 41 உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் காணலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி-17
பாஜக- 14
அஇஅதிமுக-2
ஐக்கிய ஜனதாதளம்-1
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
காங்கிரஸ்- 4
திமுக- 3
ராஷ்ட்ரியஜனதா தளம்- 2
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 1
பிற கட்சிகள்- 14
ஒய்ஆர் காங்கிரஸ் கட்சி- 4
பிஜூ ஜனதா தளம்- 3
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி -2
ஆம்ஆத்மி -2
சமாஜ்வாதிக் கட்சி -2
ராஷ்ட்ரிய லோக் தளம்- 1
02:02 PM (IST) Jun 10
ராஜஸ்தான் தேர்தல்: காங்.பாஜக தலைவர்கள் வாக்குவாதத்தால் வாக்குப்பதிவு நிறுத்தம்
ராஜஸ்தானில் மாநிலங்களவைக்கு 4இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அங்கு 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் உறுதியாகிவிடும் சூழலில், 3 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தங்களி்ன் எம்எல்ஏக்கள் அனைவரையும் கடந்த 2ம் தேதி முதல் உதய்பூரில் உள்ள சிந்தன் ஷிவிரில் உள்ல சொகுசு ஹோட்டலில் வைத்திருந்தது. பாஜக தனது எம்எல்ஏக்கள் அனைவரையும் ஜெய்பூருக்கு அழைத்துச் சென்றிருந்தது.
இன்று தேர்தல் நடப்பதையடுத்து, எம்எல்ஏக்கள் வாக்களிக்க அழைத்துவரப்பட்டனர். இன்று காலை 9மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 10.30மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 40 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. ராஜஸ்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவரும் பாஜக எம்எல்ஏவு ராஜேந்திர ரத்தோடுக்கும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோத்ஸ்ராவுக்குவுக்கும் இடையே வாக்குமையத்தில் கடும்வாக்கு வாதம் ஏற்பட்டது.
பாஜக எம்எல்ஏ கைலாஷ் மீனா வாக்களித்துவிட்டு, தனது வாக்குச்சீட்டை பாஜக வாக்குப்பதிவு ஏஜென்டிடம் காண்பித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவே ராஜேந்திர ரத்தோடு, கோவிந்த் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதன்பின் தேர்தல்ஆணைய அதிகாரிகள் தலையிட்டு மீண்டும் வாக்குப்பதிவைத் தொடர்ந்தனர்.
கண்காணிப்புக் கேமிரா காட்சியைஆய்வு செய்தபின் கைலாஷ் மீனா வாக்குசீட்டை பாஜக ஏஜென்டிடன் காண்பித்தாரா என்பது உறுதி செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்
01:43 PM (IST) Jun 10
மகாராஷ்டிராவில் 280 எம்எல்ஏக்கள் வாக்களிப்பு
மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய ஒன்றரை மணிநேரத்தில் 50 சதவீதம்வாக்குகள் பதிவாகின. பிற்பகல் ஒரு மணி அளவில் 280 எம்எல்ஏக்கள் வாக்களித்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத்தான் வாக்களித்தேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ கே.ஸ்ரீனிவாச கவுடா துணிச்சலாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் 4 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் வெற்றி உறுதியாகிவிட்டது, 4-வது இடத்துக்குதான் கடும்போட்டி நிலவுகிறது. 119 எம்எல்ஏக்களுடன் பாஜக வலுவாக இருப்பதால் 2 எம்பிக்கள் கிடைப்பது உறுதி, ஒரு எம்.பி. பதவி காங்கிரஸுக்கு செல்லும். 4-வது இடம் யாருக்கு என்பதில் இழுபறி நீடிக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.பி. உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷுக்கு வெற்றி உறுதி. ஆனால், சிறுபான்மை பிரிவைச்சேர்ந்த மன்சூர் அலியை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹெச்டி குமாரசாமி, நிருபர்களிடம் இன்று கூறுகையில் “காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. எங்கள் கட்சி எம்எல்ஏக்களையே எங்களுக்கு வாக்களிக்கவிடாமல், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா நெருக்கடி கொடுக்கிறார். ஜேடிஎஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா நெருக்கடி கொடுக்கிறார். எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு கடிதம் எழுதி மனசாட்சியுடன் வாக்களியுங்கள், காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் எனக் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்
இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த ஜேடிஎஸ் எம்எல்ஏ ஸ்ரீனிவாச கவுடாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது, “ நான் காங்கிரஸ்கட்சிக்குத்தான் வாக்களித்தேன். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியை எனக்குப் பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.
01:09 PM (IST) Jun 10
ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, ஜார்க்கண்ட் நிலை
ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவில் மாநில கட்சிகளே ஆதி்க்கம் செலுத்துகின்றன. ஆந்திராவில் காலியாகும் 4 இடங்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் எனத் தெரிகிறது. தெலங்கானாவில் காலியாகும்2 இடங்களை கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி பிடிக்கும். ஒடிசாவில் காலியாகும் 3 இடங்களும் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு கிடைக்கும்.
உத்தரகாண்டில் ஒரு இடத்துக்கான தேர்தலில் பாஜக சார்பில் கல்பனா சைனி போட்டியின்றி தேர்வாகிவிட்டார். காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.
ஜார்க்கண்டில் 2 இடங்களுக்கு ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக தலா ஒரு இடத்தை வென்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் மஹுவா மஜ்ஜி, பாஜக சார்பில்ஆதித்யா சாஹு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பிஹாரில் காலியாகும் 3 இடங்களில் பாஜகவுக்கு ஓர் இடமும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு ஓர் இடமும் கிடைக்கும். மீதமுள்ள ஓர் இடம் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு கிடைக்கும். ஆர்ஜேடி சார்பில் லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி தேர்வாகிறார்.
12:49 PM (IST) Jun 10
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கொடி
பஞ்சாப் மாநிலத்தில் மாநிலங்களவைக்கு 2 இடங்கள் காலியாகின்றன. இந்த இடங்களுக்கு பஞ்சாப் சுற்றுச்சூழல் ஆர்வலர் பல்பீர்சிங் சீச்சி்வால், தொழிலதிபர் சமூகஆர்வலர் விக்ரம்ஜித் சிங் சஹ்னே ஆகியோர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
12:48 PM (IST) Jun 10
மத்தியப் பிரதேசத்தில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு
மத்தியப்பிரதேசத்தில் மாநிலங்களவைக்கு 3 இடங்கள் காலியாகின்றன. இதில் பாஜகவுக்கு 2 இடங்கள் உறுதியாகிவிட்டது, காங்கிரஸுக்கு இருக்கும் எம்எல்ஏக்கள் மூலம் ஒரு இடம் கிடைக்கும். காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி. விவேக் தன்ஹா தேர்வாகிவிடுவார். பாஜக சார்பில் மாநில பொதுச்செயலாளர் கவிதா பட்டிதார், ஜபல்பூர் நகராட்சி கவுன்சிலர் சுமித்ரா வால்மீகி ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெறுவார்கள்.
12:29 PM (IST) Jun 10
எங்க கட்சியினரையே எங்களுக்கு வாக்களிக்காம தடுக்குறாரு: சித்தராமையா மீது குமாரசாமி குற்றச்சாட்டு
கர்நாடக மாநிலத்தில் 4 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் வெற்றி உறுதியாகிவிட்டது, 4-வது இடத்துக்குதான் கடும்போட்டி நிலவுகிறது.
மதச்சார்பற்றஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹெச்டி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மீது அடுக்கடுக்ககான குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவர் நிருபர்களிடம் இன்று கூறுகையில் “காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. எங்கள் கட்சி எம்எல்ஏக்களையே எங்களுக்கு வாக்களிக்கவிடாமல், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா நெருக்கடி கொடுக்கிறார். ஜேடிஎஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா நெருக்கடி கொடுக்கிறார்.
எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு கடிதம் எழுதி மனசாட்சியுடன் வாக்களியுங்கள், காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால் கடிதம் எழுதவில்லை என்று மறுத்து இரட்டை வேடம் போடுகிறார். பாஜக பொதுச்செயலாளர் டிசி ரவி காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று சந்தித்து பாஜகவேட்பாளருக்கு ஆதரவு கோரியுள்ளார். ஜேடிஎஸ் கட்சி 30 முதல் 31 வாக்குகள் பெறும் என நம்புகிறேன். ஜேடிஎஸ் எம்எல்ஏ கிருஷ்ணா கவுடா காங்கிரஸுக்கு வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.
12:16 PM (IST) Jun 10
தமிழகத்தில் 6 உறுப்பினர் போட்டியின்றி தேர்வு
தமிழகத்தில் மாநிலங்களவைக்கு 6 இடங்கள் காலியாகின்றன. இதில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். தமிழகத்தில் திமுக 3 இடங்களை தக்கவைத்து, ஒரு இடத்தை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. திமுக சார்பில் ஆர் கிரிராஜன், கேஆர்என் ராஜேஷ்குமார், எஸ்.கல்யானசுந்தரம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு பெற்றனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் நிதிஅமைச்சர், ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
11:59 AM (IST) Jun 10
பாஜகவின் கோட்டை உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 இடங்கள் காலியாக உள்ளன. இதில் பாஜகவின் எம்எல்ஏக்கள் பலத்தின்(273) மூலம் 8 இடங்கள் உறுதியாகிவிடும்.
மீதமுள்ள 3இடங்களுக்கு போட்டி நிலவுகிறது. கோரக்பூர் தொகுதியை யோகி ஆதித்யநாத்துக்காக விட்டுக்கொடுத்த எம்எல்ஏ ராதாமோகன் தாஸ்அகர்வால், பாஜகவின் ஓபிசி பிரிவு தேசியத் தலைவர் கே.லட்சுமண், ஷாஜன்பூர் தாழ்த்தப்பட்டோர் தலைவர் மிதிலேஷ் குமார், முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பாய், எம்.பி. சுரேந்திரசிங் நாகர், உ.பி. பிற்படுத்தப்பட்டபிரிவு நிதிஆணையத் தலைவர் பாபுராம் நிஷாத், மகளிர் பிரிவு முன்னாள் மாநிலத்தலைவர் தர்ஷனா சிங், முன்னாள் எம்எல்ஏ சங்கீதா யாதவ் ஆகிய 8 பேரும் போட்டியின்றி வெற்றி பெறுவார்கள்.
மீதமுள்ள 3 இடங்களுக்கு எம்எல்ஏக்கள் பலத்தைப் பொறுத்து தேர்தல் நடக்கும். இதில் சமாஜ்வாதிக் கட்சி முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபிலுக்கு ஆதரவு அளித்துள்ளது. இது தவிர ராஷ்ட்ரிய லோக் தளம் சார்பில் ஜெயந்த் சவுத்ரி,சமாஜ்வாதி சார்பி்லஜாவித் அலிகான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக் தளம், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகியவை இணைந்து 125 எம்எல்ஏக்கள் வைத்திருப்தால், கடைசி 3 இடங்களை இந்த கூட்டணி வெல்லும் எனத் தெரிகிறது.
கர்நாடக மாநிலத்தில் 4 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் வெற்றி உறுதியாகிவிட்டது, 4-வது இடத்துக்குதான் கடும்போட்டி நிலவுகிறது. 119 எம்எல்ஏக்களுடன் பாஜக வலுவாக இருப்பதால் 2 எம்பிக்கள் கிடைப்பது உறுதி, ஒரு எம்.பி. பதவி காங்கிரஸுக்கு செல்லும். 4-வது இடம் யாருக்கு என்பதில் இழுபறி நீடிக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.பி. உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷுக்கு வெற்றி உறுதி. ஆனால், சிறுபான்மை பிரிவைச்சேர்ந்த மன்சூர் அலியை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.
காங்கிரஸ் மீது குற்றம்சுமத்தும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து இரு எம்எல்ஏக்களை கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களிக்க வைக்க பாஜக ரகசியமாக டீல் பேசிவிட்டதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
இதற்கிடையே வாக்களிக்க வந்த மதர்ச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவும், தேவகவுடா மகனுமான ஹெச்டி ரேவண்ணா தன்னுடைய வாக்குச்சீட்டை காங்கிரஸ் மூத்த தலைவரும் வாக்குமைய ஏஜென்டாக இருக்கும் டி.கே.சிவக்குமாரிடம் காண்பித்துள்ளார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ரேவண்ணாவின் வாக்கை செல்லாததாக அறிவிக்க தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட உள்ளது.
11:46 AM (IST) Jun 10
ராஜஸ்தான் தேர்தலில் 40 % வாக்குப்பதிவு
ராஜஸ்தானில் மாநிலங்களவைக்கு 4இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அங்கு 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் உறுதியாகிவிடும் சூழலில், 3 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
கடந்த வாரத்திலிருந்தே ராஜஸ்தானில் அரசியல் நாடகம் அரங்கேறிவிட்டது. எம்எல்ஏக்களை தூக்குவதும், குதிரைபேரம் பேசுவதும் இருந்ததால், எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சி சொகுசு ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தது.
காங்கிரஸ் கட்சி தங்களி்ன் எம்எல்ஏக்கள் அனைவரையும் கடந்த 2ம் தேதி முதல் உதய்பூரில் உள்ள சிந்தன் ஷிவிரில் வைத்தது. பாஜக தனது எம்எல்ஏக்கள் அனைவரையும் ஜெய்பூருக்கு அழைத்துச் சென்றது. இன்று தேர்தல் நடப்பதையடுத்து, எம்எல்ஏக்கள் வாக்களிக்க அழைத்துவரப்பட்டனர்.
காங்கிரஸ் சார்பில் முகல் வாஸ்னிக், ரன்தீப் சுர்ஜேவாலா இருவரின் வெற்றி உறுதி, பிரமோத் திவாரி நிலைதான் சிக்கல். இன்று காலை 9மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 10.30மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 40 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
11:41 AM (IST) Jun 10
ஹிரியானா தேர்தலில் காங்கிரஸ் காலியா?
ஹரியாணாவில் காலியாக இருக்கும் 2 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பாஜகவுக்கு தலா ஒரு இடம் உறுதியான நிலையில் கடைசி நிமிடத்தில் காங்கிரஸ் 2-வது வேட்பாளரை களமிறக்கியது. ஊடக அதிபர் கார்த்திகேய ஷர்மாவை காங்கிரஸ் கட்சி 2-வது வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் 31 எம்எல்ஏக்கள் முதல் வேட்பாளர் அஜெய் மக்கானை வெற்றி பெற வைத்துவிடுவார்கள். ஆனால், கார்த்திகேய ஷர்மாவுக்கான எம்எல்ஏக்களை எங்கிருந்து தேடப்போகிறது எனத் தெரியவில்லை. இது அஜெய் மக்கானின் வெற்றியே வேட்டு வைத்துவிடும் அளவுக்கு சூழல் மாறியுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அஜெய் மக்கனுக்கு வாக்களிக்காமல், கார்த்திகேய ஷர்மா பக்கமும் திரும்பலாம்.
காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப்சிங் பிஸ்னோய் கடைசி நேரத்தில் போர்க்கொடி தூக்கியுள்ளது காங்கிரஸுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குல்தீப் மட்டுமல்லாமல் மற்றொரு எம்எல்ஏவும் காங்கிரஸ் மீது அதிருப்தியுடன் உள்ளனர். இருவருமே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று சுயேட்சை எம்எல்ஏ ரந்திர் கோலன் இன்று தெரிவித்துள்ளார்.
31எம்எல்ஏக்கள் இருந்தால்தான் முதல் வேட்பாளர் வெல்ல முடியும், ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் வாக்களிக்காவிட்டால் முதல் வேட்பாளரே வெல்வது கடினமாகிவிடும். பாஜக சார்பில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கிருஷ்ணன் பன்வார் மட்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார், அவருக்கு வெற்றி உறுதியாகிவிடும். சுயேட்சை எம்எல்ஏக்கள் 6 பேரும் பாஜகவுக்கு வாக்களிக்க இருக்கிறார்கள்.
11:24 AM (IST) Jun 10
கர்நாடகாவில் காட்சிகள் மாறுது: கட்சி மாறும் எம்எல்ஏக்கள்
கர்நாடக மாநிலத்தில் 4 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் வெற்றி உறுதியாகிவிட்டது, 4-வது இடத்துக்குதான் கடும்போட்டி நிலவுகிறது.
119 எம்எல்ஏக்களுடன் பாஜக வலுவாக இருப்பதால் 2 எம்பிக்கள் கிடைப்பது உறுதி, ஒரு எம்.பி. பதவி காங்கிரஸுக்கு செல்லும். 4-வது இடம் யாருக்கு என்பதில் இழுபறி நீடிக்கிறது. பாஜக சார்பில் கன்னட நடிகர் ஜக்கேஷ், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்எல்சி லஹர் சிங் சிரோயா ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ் இடம் உறுதியாகிவிடும்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.பி. உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷுக்கு வெற்றி உறுதி. ஆனால், சிறுபான்மை பிரிவைச்சேர்ந்த மன்சூர் அலியை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இது தவிர மதச்சார்பற்றஜனதா தளம் கட்சியும் குபேந்திர ரெட்டியை களமிறக்கியுள்ளது. 45 எம்எல்ஏக்கள் மூலம் ஒரு எம்.பி. தேர்வாகுவார். ஆதலால், 4-வது எம்.பி. பதவி யாருக்கு என்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இதற்கிடையே பாஜக பொதுச்செயலாளர் டிசி ரவி காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று சந்தித்து பாஜகவேட்பாளருக்கு ஆதரவு கோரியுள்ளார். இதுகுறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹெச்டி குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மீது குற்றம்சுமத்தும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து இரு எம்எல்ஏக்களை கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களிக்க வைக்க பாஜக ரகசியமாக டீல் பேசிவிட்டதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை இன்று அதிகாலை ரகசியமான இடத்தில் நடந்துள்ளது.
11:16 AM (IST) Jun 10
ஹரியாணாவில் அஜெய் மக்கானுக்கு ஆப்பு வைக்கும் காங்கிரஸ்
ஹரியாணாவில் காலியாக இருக்கும் 2 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பாஜகவுக்கு தலா ஒரு இடம் உறுதியான நிலையில் கடைசி நிமிடத்தில் காங்கிரஸ் 2-வது வேட்பாளரை களமிறக்கியது. ஊடக அதிபர் கார்த்திகேய ஷர்மாவை காங்கிரஸ் கட்சி 2-வது வேட்பாளராக நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் 31 எம்எல்ஏக்கள் முதல் வேட்பாளர் அஜெய் மக்கானை வெற்றி பெற வைத்துவிடுவார்கள். ஆனால், கார்த்திகேய ஷர்மாவுக்கான எம்எல்ஏக்களை எங்கிருந்து தேடப்போகிறது எனத் தெரியவில்லை. இதனால் அஜெய் மக்கானின் வெற்றியே வேட்டுவைத்துவிடும் அளவுக்கு சூழல் மாறியுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அஜெய் மக்கனுக்கு வாக்களிக்காமல், கார்த்திகேய ஷர்மா பக்கமும் திரும்பலாம்.
காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப்சிங் பிஸ்னோய் கடைசி நேரத்தில் போர்க்கொடி தூக்கியுள்ளது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மாநில காங்கிரஸ்தலைவர் பதவியை எதிர்பார்த்த குல்தீப்சிங்கை காங்கிரஸ் தலைமை நிராகரித்துவிட்டது. இதனால் அதிருப்தியில்இருப்பதால் இவருடைய வாக்கு யாருக்கு என்பதில் சிக்கல் இருக்கிறது. இதனால் முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா சுத்திரமாகச் செயல்பட்டு எம்எல்ஏக்களைத் தக்கவைக்க காங்கிரஸ் தலைமை அனுமதியளித்துள்ளது. 31எம்எல்ஏக்கள் இருந்தால்தான் முதல் வேட்பாளர் வெல்ல முடியும் என்பதால், குல்தீப்சிங் பிஷ்னோய் வாக்கும் முக்கியமாக இருக்கிறது. பாஜக சார்பில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கிருஷ்ணன் பன்வார் மட்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார், அவருக்கு வெற்றி உறுதியாகிவிடும்.
10:57 AM (IST) Jun 10
மகாவிஸ் அகாதி கூட்டணிக்கு ஒவைசி ஆதரவு
மகாராஷ்டிரா மாநிலங்களவைத் தேர்தலில் சிவேசனா கட்சி தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி தெரிவி்த்துள்ளார். மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் பாஜகவுக்கும், மகாவிகாஸ் அகாதி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
10:54 AM (IST) Jun 10
கவனத்தை ஈர்க்கும் கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் 4 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் வெற்றி உறுதியாகிவிட்டது, 4-வது இடத்துக்குதான் கடும்போட்டி நிலவுகிறது.
119 எம்எல்ஏக்களுடன் பாஜக வலுவாக இருப்பதால் 2 எம்பிக்கள் கிடைப்பது உறுதி, ஒரு எம்.பி. பதவி காங்கிரஸுக்கு செல்லும். 4-வது இடம் யாருக்கு என்பதில் இழுபறி நீடிக்கிறது. பாஜக சார்பில் கன்னட நடிகர் ஜக்கேஷ், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்எல்சி லஹர் சிங் சிரோயா ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ் இடம் உறுதியாகிவிடும்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.பி. உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷுக்கு வெற்றி உறுதி. ஆனால், சிறுபான்மை பிரிவைச்சேர்ந்த மன்சூர் அலியை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இது தவிர மதச்சார்பற்றஜனதா தளம் கட்சியும் குபேந்திர ரெட்டியை களமிறக்கியுள்ளது. 45 எம்எல்ஏக்கள் மூலம் ஒரு எம்.பி. தேர்வாகுவார். ஆதலால், 4-வது எம்.பி. பதவி யாருக்கு என்பதில் சிக்கல் நீடிக்கிறது.
10:21 AM (IST) Jun 10
மகாராஷ்டிராவில் குதிரைபேரம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் சிவசேனாவுக்கு 56 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்எல்ஏக்கள், காங்கிரஸுக்கு 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். 42 எம்எல்ஏக்கள் சேர்ந்து ஒரு எம்பியைத் தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிக்கு ஒரு எம்.பி. உறுதியாகிவிட்டது.
ஆனால் சிவசேனா கட்சிக்கு ஒரு இடம்தான் உறுதி என்றாலும், 2-வதாக கோல்காபூர் நிர்வாகி சஞ்சய் பவாரை களமிறக்கியுள்ளது. இந்த இடத்தில் முதலில் சத்திரபதி சிவாஜியின் குடும்பத்தில் இருந்து வந்தவரும் மராத்திய சமூகத்தில் பெரும் செல்வாக்குபெற்ற சம்பாஜிராஜே சத்ரபதி சிவாஜி போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அவர் சுயேட்சையாகப் போட்டியிடுவதாக இருந்தார், ஆனால்,சிவசேனா சீட் வழங்குவதாக அறிவித்தது.
பாஜகவைப் பொறுத்தவரை 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு சிரமமின்றி 2 எம்பிக்கள் கிடைத்துவிடுவார்கள். அதாவது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், 3-வதாக தனஞ்செய் மகாதிக் போட்டியிடுகிறார். பாஜகவின் இந்த காய்நகர்த்தல் நிச்சயம் குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும் என்று சிவசேனா குற்றம்சாட்டுகிறது.
09:57 AM (IST) Jun 10
ராஜஸ்தானில் சொகுசு ஹோட்டலில் பாஜக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
ராஜஸ்தானில் மாநிலங்களவைக்கு 4இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அங்கு 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு எம்பி வெற்றி பெறுவதற்கு 41 வாக்குகள் தேவை. 200 எம்எல்ஏக்கள் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்களும் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் உறுதியாகிவிடும் சூழலில், 3 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஓர் இடம் மட்டுமே கிடைக்கும் நிலையில், பாஜக தலைவர் ஷியாம் திவாரி தவிர்த்து, ஊடக அதிபர் சுபாஷ் சந்திராவை சுயேட்சையாக களமிறக்கியுள்ளது. பாஜவுக்கு 2-வது வேட்பாளரை வெற்றி பெறவைக்க 30 வாக்குகள் தவிர்த்து 11 வாக்குகள் தேவை. காங்கிரஸ் கட்சிக்கு 3வது வேட்பாளருக்கு 26 வாக்குகள் கைவசம் இருக்கும் நிலையில், 15 வாக்குகள் தேவை. இதில் பாஜகவுக்கு 2-வது இடம் கிடைக்குமா, அல்லது காங்கிரஸுக்கு 3-வது இடம் கிடைக்குமா என்பது பரபரப்பின் உச்சக்கட்டம்.
கடந்த வாரத்திலிருந்தே ராஜஸ்தானில் அரசியல் நாடகம் அரங்கேறிவிட்டது. எம்எல்ஏக்களை தூக்குவதும், குதிரைபேரம் பேசுவதும் இருந்ததால், எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சி சொகுசு ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தது. இதனால் பாஜக, காங்கிரஸ் கட்சி இருதரப்பும் ஒருவர் மாறி ஒருவர் தேர்தல் ஆணையத்திலும், அமலாக்கப்பிரிவிலும் புகார்கள் அளித்தனர்.
காங்கிரஸ் கட்சி தங்களி்ன் எம்எல்ஏக்கள் அனைவரையும்க டந்த 2ம் தேதி முதல் உதய்பூரில் உள்ள சிந்தன் ஷிவிரில் வைத்துள்ளது. பாஜக தனது எம்எல்ஏக்கள் அனைவரையும் ஜெய்பூருக்கு அழைத்துச்சென்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் முகல் வாஸ்னிக், ரன்தீப் சுர்ஜேவாலா இருவரின் வெற்றி உறுதி, பிரமோத் திவாரி நிலைதான் சிக்கல்.