Rajinikath will come mla but not cm...s.ve.sekar comment

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்து தேர்தலில் நின்று எம்எல்ஏ ஆகலாம் ஆனால் அவரால் முதலமைச்ராக முடியாது என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது இரண்டாம் கட்ட ரசிகா்களுடனான சந்திப்பை இன்று முதல் வருகிற 31ம் தேதி நடத்தி வருகிறார். இன்று காலை 8.30 மணியில் இருந்து ரசிகர் சந்திப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம், நீலகிரி,தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது, சில நேரங்களில் நானும் தவறுகளை செய்துள்ளேன். டிச.,31ல் அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போன் என கூறினார்.

இது குறித்து கருங்த்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர், ரஜினி எம்.எல்.ஏ ஆகலாம், ஆனால் முதலமைச்சர் ஆக முடியுமா என்பது தெரியவில்லை என கூறினார்.

மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய அவர் ரஜினி அரசியலுக்கு வரலாம், ஆனால் அவரின் உடல்நிலை ஒத்துழைக்க வேண்டும் இறைவனை என வேண்டி கொள்கிறேன். என தெரிவித்தார்.

1996-ல் தவற விட்ட ஒரு வாய்ப்பை 2018-ல் பிடிக்க முடியுமா என்பது தெரியாது. அவ்வாறு அவர் பிடித்துவிட்டால் இறைவன் அருள் அவருக்கு இருப்பதாகவே கருதுகிறேன் என கூறினார்.. 

ரஜினியை பாஜக அரசியலில் பயன்படுத்தி கொள்ளுமா என்பது குறித்து அமித் ஷா தான் முடிவு செய்வார் எனவும் எஸ்,விசேகர் தெரிவித்தார்.