Asianet News TamilAsianet News Tamil

தமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்த்..!? கசிந்தது தகவல்...!

அடுத்த தமிழக பாஜக தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு கொண்டிருப்பது நடிகர் ரஜினிகாந்த் என்ற பேச்சு அடிபடுகிறது. 

rajinikantha have chance to become as tamilnadu bjp state president
Author
Chennai, First Published Sep 2, 2019, 12:23 PM IST

தமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்த்..!? கசிந்தது தகவல்...!  

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் யாரும் எதிர்பாராத விதமாக தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு நேற்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

rajinikantha have chance to become as tamilnadu bjp state president

இந்த நிலையில் தமிழிசை வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவி தமிழகத்தில் காலியாக உள்ள நிலையில் அந்த இடத்திற்கு வேறு யாரு நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்ற விமர்சனம் இப்போதே அரசியல் வட்டாரத்தில் கிளம்பி உள்ளது. அந்தவகையில் அடுத்த தலைவராக எச் ராஜா வா? அல்லது பொன்  ராதா ? நடிகர் ரஜினிகாந்த்... என அனைவரின் பெயரும் அடிபடுகிறது.

rajinikantha have chance to become as tamilnadu bjp state president

இருந்தபோதிலும் அடுத்த தமிழக பாஜக தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு கொண்டிருப்பது நடிகர் ரஜினிகாந்த் என்ற பேச்சு அடிபடுகிறது. மேலும் இது குறித்த பேச்சுவார்த்தை ரஜினிகாந்துடன் பாஜக மேலிடம் மேற்கொண்டு வருவதாகவும் ஒருசில உடன்பாடு காரணமாக சற்று இழுபறியாக இருப்பதாகவும் நம்பகதக  தகவல்கள் தெரிவித்து உள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாஜக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டால் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க ரஜினிகாந்த் முன் வர உள்ளதாகவும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios