*    அ.தி.மு.க.வுடனான கூட்டணியை பி.ஜே.பி. இன்னும் சீக்கிரமாகவே அமைத்து, சீக்கிரமாகவே பிரசாரத்தையும் துவக்கியிருக்க வேண்டும்: மருது அழகுராஜ். 
(ஆமா தல தேர்தலும் இன்னும் சீக்கிரமாகவே நடந்து, நீங்களும் இன்னும் சீக்கிரமாகவே தோத்திருப்பீங்க படு மோசமாக. தோல்விக்கு சொல்லுற காரணத்தைப் பாருங்க.)

*    நீட், ஹைட்ரோகார்பன் போன்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக எதிர்கட்சிகள் வைத்த பொய் பிரசாரங்களுக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் வலுவாக மறுப்பு கருத்துக்களை தெரிவிக்கவில்லை: பி.ஜே.பி. இளைஞரணி முருகானந்தம்.

(ஏம்ணே, உங்க கட்சி மேலே எதிர்கட்சி வைக்கிற விமர்சனத்துக்கு தமிழக அமைச்சர்கள் எதுக்கு மறுப்பு சொல்லணும்? அமைச்சர்கள் என்ன உங்க கட்சியோட நட்சத்திர பேச்சாளர்களா! அப்போ இதுதான் உண்மையா. அடிமைக்கூட்டமாதான் அவிய்ங்களை வெச்சிருக்கோமுன்னு ஒத்துக்குறீங்களா!)

*    தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர மக்கள் சம்மதித்து, தோள் கொடுத்திருக்கிறார்கள்: ஓ.பன்னீர்செல்வம்.
(தல, வெறும் ஒன்பது தொகுதி மக்கள் வழிவிட்டது ஓ.கே. மிச்சம் 13 தொகுதி மக்கள் உங்களை ஓட ஓட விரட்டியிருக்காய்ங்களே அதுக்கு என்ன விளக்கம்?)
*    சாதித்துவிட்டார் மோடி! பிரதமருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

(உங்க வாயி இப்படி வாழ்த்து சொன்னாலும், மனசாட்சி ‘தமிழகத்துல தாமரை மலரலையேன்னு நம்மளை கட்சி துவக்க சொல்லி உயிரை வாங்குவாரே’ன்னு புலம்புறது தெளிவா புரியுதே சூப்பர் தல)