Rajinikanth who made the darshan of the Raghavendra temple

நடிகர் ரஜினிகாந்தின், அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பிறகு, அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஸ்ரீகுரு ராகவேந்திரா சுவாமி கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

20 வருடங்களுக்கு மேலாக அரசியலுக்கு வருவார்... வருவார்... என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், ஒரு வழியாக கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று தான் அரசியலுக்கு வந்து விட்டதாகவும், தனிக்கட்சி தொடங்கி வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். மேலும் ரசிகர்களையும், மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் ”ரஜினி மக்கள் மன்றம்” என்ற செயலியையும் தொடங்கி விறுவிறுப்பாக அரசியல் பணிகளை செய்து வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று கட்சியின் பெயரை அறிவித்து அரசியலுக்கு வர இருப்பதாக அவரது ரசிகர் மன்ற வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து நகாட்சி, மாநகராட்சி, ஒன்றியம், பேருராட்சி மற்றும் ஊராட்சியை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். அப்போது தேனி, ஆண்டிப்பட்டி, மயிலாடும்பாறை, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஒன்றியங்களின் அமைப்புகள், மற்றும் பெரியகுளம், கூடலூர் உள்ளிட்ட தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்தில், செயலாளர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்களின் பெயர்கள் அப்போது அறிவிக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீகுரு ராகவேந்திரா சுவாமி கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.