Asianet News TamilAsianet News Tamil

ரஜினிகாந்தா யாரு அது? அந்த விஷயத்திற்கு பிறகு முற்றிலும் மாறிய ஸ்டாலின் பேச்சு...!

அதாவது, சமீபத்தில் ‘தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்?’எனும் சர்வேக்கு, எடப்பாடியார், பன்னீர்செல்வம், கமல்ஹாசன், அன்புமணி, ரஜினிகாந்த், விஜயகாந்த் என அத்தனை பேரையும் விட அதிகமான சதவீத வித்தியாசத்தில் ஸ்டாலின் மேலேறி நிற்கும் ரிசல்ட் கிடைத்திருக்கிறது.

Rajinikanth who is that? MK Stalin speech changed after this
Author
Chennai, First Published Nov 1, 2018, 4:10 PM IST

புலனாய்வு வார இதழ்களை விட சில படிகள் அதிகமாகவே ஒரு விவகாரத்தில் ஸ்கோர் செய்திருந்தது ஏஸியாநெட் இணைய தளம். அது...அரசியலுக்கு அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்தை தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி வம்பிழித்த கதைதான். Rajinikanth who is that? MK Stalin speech changed after this

நம் இணையதள செய்தியின் வழியாகத்தான் தி.மு.க., ரஜினியின் மக்கள் மன்றம் இரண்டையும் தாண்டி ஒட்டுமொத்தமாக அரசியல் வட்டாரமும் அந்த விவகாரத்தின் ஆழத்தை உணர்ந்தன. அந்த பட்டாசு இன்னமும் வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது... இந்த சூழலில் ரஜினி மன வேதனைப்பட்டதால் முரசொலி வெளியிட்ட ‘பாக்ஸ்’ வடிவ வருத்த மடலும் பிரச்சனையை இன்னும் பெரிதுதான் ஆக்கியதே தவிர, தீர்தது வைக்கவில்லை. 

 Rajinikanth who is that? MK Stalin speech changed after this

வருத்தத்துக்கு பிறகும் ‘எங்கள் தலைவருக்கும், எங்களுக்கும் நடுவில் மூன்றாவது நபர் நீ யார்?’ என்று ரஜினி ரசிகர்கள் தி.மு.க.வை விமர்சித்தனர். பதிலுக்கு சிலந்தியின் வார்த்தையில் என்ன தப்பு இருக்குது? முப்பது வருஷமாய் ரசிகனை கசக்கிப் பிழிந்துவிட்டு இப்போது தூக்கி எறியும் நபரை விமர்சித்தது சரியே’ என்று தி.மு.க.வினர் திட்டி தீர்த்தனர். ஆனால் அம்மாம் பெரிய கட்சியான தி.மு.க.வே, இன்னும் கட்சியே துவக்காத தனக்காக இறங்கி வந்தது ரஜினியை கெத்து கொள்ள வைத்தது. இந்த சூழலில்தான் விஷயம் இப்போது ரிவர்ஸ் ஆகியுள்ளது. Rajinikanth who is that? MK Stalin speech changed after this

அதாவது, சமீபத்தில் ‘தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்?’எனும் சர்வேக்கு, எடப்பாடியார், பன்னீர்செல்வம், கமல்ஹாசன், அன்புமணி, ரஜினிகாந்த், விஜயகாந்த் என அத்தனை பேரையும் விட அதிகமான சதவீத வித்தியாசத்தில் ஸ்டாலின் மேலேறி நிற்கும் ரிசல்ட் கிடைத்திருக்கிறது. இதை தி.மு.க. கொண்டாடி வருகிறது. இந்த சர்வே வெளியான பிறகு ரஜினி குறித்த ஸ்டாலினின் பார்வை முற்றிலுமாய் மாறியிருக்கிறது.

 Rajinikanth who is that? MK Stalin speech changed after this

ரஜினி கட்சி துவக்கிக் கொண்டு வந்து நின்றாலும் அவரது ரசிகர்களில் சில சதவீதத்தை தவிர மற்ற யாரும் அவரை ஆதரிக்கப் போவதில்லை எனும் முடிவுக்கு ஸ்டாலின் வந்திருக்கிறார். அவரது எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக கமல்ஹாசனை விடவும் குறைவாகத்தான் ரஜினிக்கு வாக்குகள் விழுந்துள்ளது. ஆக தி.மு.க. வட்டாரம் மீண்டும் ரஜினியை உரச துவங்கிவிட்டது அரசியலில் ‘ரஜினியா! ஹூ இஸ் தட்?’ என்று கேட்டபடி. இதெப்டியிருக்கு?...

Follow Us:
Download App:
  • android
  • ios