பேட்ட படம் ரிலீசானது முதல் அதிமுகவிலிருந்து கட்டம்கட்டப்பட்ட முன்னாள் எம்.பி ஒருவர் படு உற்சாகமாக வலம் வருகிறார்.

அதிமுகவில் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் கே.சி.பழனிசாமி. முன்னாள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏவான இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர். பின்னர் ஓ.பி.எஸ்- ஈபிஎஸ் இணைந்த பிறகு கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார் கே.சி.பி. இப்போது தனி அணியாக பிரிந்து தொண்டர்களைத் திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் வெளியான பேட்ட படம் கே.சி.பியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பேட்ட படத்தில் இளம் வயது தோற்றத்தில் வரும் ரஜினி, தன்னைப்போலவே இருப்பதாக தம்பட்டமடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தில் ரஜினியின் மீசை, வேட்டிக் கட்டு எல்லாம் தன்னைப் போலவே இருப்பதாக நண்பர்களிடம் சொல்லி பெருமை அடிக்கும் இவர், ரஜினியின் அதே ஸ்டில்லுடன் தனது போட்டோவையும் இணைத்து, பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளும் இருக்கும் வாட்ஸ் - அப் குழுக்களுக்கெல்லாம் அனுப்பி வருகிறார். தன்னைப் பார்த்தே பேட்ட படத்தில் ரஜினிக்கு மீசை வைத்துள்ளனர் என்கிறாராம்.