மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ஆளும் எடப்பாடி அரசினை கடுமையாக சாடினார். .

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு காமராஜர் அரங்கத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அனைத்து நடிகர்களும் பங்குபெற்றனர். திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்தும், செயல் தலைவர் ஸ்டாலினும் அருகருகே அமர்ந்திருந்தனர். நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் வரிசையாக கேள்விகளை எழுப்பி ஆளும் எடப்பாடி அரசினை விமர்சித்தார். அவர் கூறுகையில், "கருணாநிதி நல்லடக்கம் செய்யும் போது முதல்வர் எடப்பாடி ஏன் மெரினாவிற்கு வரவில்லை? ஜாம்பவான்கள் முட்டுனாங்க! இந்த திஸ் திங்லாம் அவங்களோட முடிஞ்சுபோச்சு!  என்று கூறினார். அவர் அவ்வாறு கூறும் பொழுது காமராஜர் அரங்கமே அதிர்ந்தது.

நடிகர் ரஜினிகாந்த், கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபொழுதும், இறந்த அன்று கோபாலபுரத்து வீட்டிலும், பிறகு ராஜாஜி ஹால் என அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த அனைத்து இடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.