டிசம்பர் 31 ஆம் தேதிதான் அரசியல் பிரவேசம் குறித்து கூறுவதாக தெரிவித்திருந்தேன், 29 ஆம் தேதியே கொள்கை குறித்து கேட்டால் நான் என்ன சொல்ல முடியும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் , முன்னாள் முதலமைச்சர்  எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி யாருமே கேள்விகேட்க முடியாது. அவரை போல எந்தஒரு தலைவரும் ஒருகட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைக்கமுடியாது என தெரிவித்தார்.

தனது  அரசியல் பிரவேசம் குறித்து எழுந்து வரும் பல்வேறு கேள்விகள், விமர்சனங்கள் குறித்து பேசினார். அதில் முக்கியமானது கொள்கை குறித்து கேட்ட போது எனக்கு தலையே சுற்றிவிட்டது என கூறியிருந்தார்.

இதற்ழ ரஜினிகாந்த் ஒரு குட்டி கதை ஒன்றை சொல்லி விளக்கமளித்தார். தான் நான் டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என தெரிவிப்பதாக சொல்லியிருந்தேன். ஆனால் 29ம் தேதி பத்திரிக்கையாளர்கள் உங்கள் கொள்கை என்ன என கேட்கிறார்கள்.

இது எப்படின்னா பொண்ணு பார்க்க போய்கொண்டிருக்கும் பொழுது, எனக்கு கல்யாண அழைப்பிதழ் வரவில்லை என கேட்ட மாதிரி இருக்கு என பதிலளித்துள்ளார்.