சீட்டுக் கட்டு கோபுரத்தில் ஒரு சீட்டை உருவினால் மொத்த கோபுரமும் சாய்வது போல, பெரிய இடத்து விவகாரங்களில் ஒரு பஞ்சாயத்து வெளியே வந்தால் அதைத்தொடர்ந்து பல விவகாரங்கள் வெடித்து வெளியே வந்து கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் ஆகியிருக்கிறது கருணாநிதியின் உதவியாளர் நித்யாவின் விவகாரமும். 

இயங்க முடியாத கருணாநிதிக்கு தாய் போல இருந்தவர் நித்யானந்தன் எனும் நித்யா. கருணாநிதியின் மறைவுக்குப் பின் நித்யாவை  தி.மு.க.வின் அதிகார குடும்பம் கண்டு கொள்ளவில்லையாம். இதனால் அவரை அ.தி.மு.க. வளைக்க முயற்சித்திருக்கிறது. இதை நித்யா மறுத்தாலும் கூட, ஸ்டாலினோ பெரும் திகைப்பில் இருக்கிறார். காரணம்? கோபாலபுரத்து வீட்டினுள் வளைய வந்த நித்யாவுக்கு அந்த வீட்டின் எல்லா பர்ஷனல் விஷயங்களும் அத்துப்படி என்பதால்தான். 
இந்த நிலையில் நித்யா , ஒருவேளை நம்மை விட்டு எதிரணிக்கு போனால் என்னாகும்? என்று ஸ்டாலின் தோண்டித் துருவியிருக்கிறார். அப்போதுதான் நித்யாவை பற்றி இன்னொரு கோண தகவல் அவருக்கு கிடைத்ததாம். அதாவது ரஜினிகாந்தின் ஒற்றன் போல நித்யா கோபாலபுரத்தில் இருந்தார்! என்பதுதான்.

என்னாங்கடா இது மந்தைவெளிக்கும், மலாய் தீவுக்கும் லிங்க் போடுற கதையா இருக்குது? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அந்த பின்னணியை விளக்குபவர்களோ...”கருணாநிதியின் கடைசி ஆட்சிக் காலத்தில் ரஜினி, கமல் இருவர் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகையரை கருணாநிதி தன் உடன் வைத்திருந்தார்.  அப்போது கருணாநிதியி பின்னால் நின்ற வகையில் ரஜினியோடு நித்யா நெருக்கமானாராம். ரஜினியின் உதவியாளர் வழியே நித்யாவிடம் எப்போதாவது பேசுவாராம் ரஜினி. மேலும் கோபாலபுரம் வீட்டுக்கு ரஜினி வரும்போதும் நித்யா ரொம்ப சுறுசுறுப்பாய் இயங்கி வரவேற்பாராம். 

கோபாலபுரத்தின் சூழல், எப்போது அங்கே வந்தால் கருணாநிதி ஃப்ரீயாக இருப்பார்? என்பதையெல்லாம் உதவியாளர் போன் மூலமாக நித்யாவிடம் பேசிய ரஜினி, ஒரு கட்டத்தில் தி.மு.க.வின் மூளை போன்ற கோபாலபுரத்தின் உள் அரசியல் நிகழ்வுகள் பற்றியும் நித்யாவிடம் கேட்டு தெரிந்து கொண்டார்!’ என்பதும் ஸ்டாலினுக்கு இப்போது தெரிய வந்திருக்கிறது. 

கோபாலபுர வீட்டுக்கு ரஜினி வருகையில் நித்யா தலைகீழாக நின்றது ஸ்டாலினுக்கு இப்போது நினைவுக்கு வந்திருக்கிறது. ஆக இதையெல்லாம் நினைத்து இப்போது பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். தி.மு.க.வின் தலைமையக செயல்பாடுகள் பற்றி ரஜினி இப்படி கலெக்ட் செய்த தகவலை வைத்து என்ன செய்தார்?” என்பதே ஸ்டாலின் கேள்வி. 

நித்யா விவகாரம் வெளியான பின், ரஜினி க்கு நித்யாவோடு தொடர்பு இருந்ததையெல்லாம் ஸ்டாலின் கண்டு பிடித்து கொதிப்பதைக் கண்டு பா.ஜ.க. தரப்பு சிரிக்கிறதாம். 
அப்படின்னா நித்யா சொன்ன தகவல்கள் தாமரையின் காதில்தான் ஓதப்பட்டுச்சா?