ரஜினி கட்சி தொடங்கியவுடன் அவரது கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு மு.க. அழகிரி முழு ஆதரவு தருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் பெருமளவு இம்மாநாட்டில் பங்கேற்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மு.க.அழகிரி கருணாநிதி காலத்தில் கட்சியை விட்டு ஒதுக்கப்பட்டார். தந்தையின் மறைவுக்கு பிறகு எப்படியாவது திமுகவில் இணைந்து விடலாம் என பலவகையில் முயற்சி செய்து வந்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் மனமிறங்கவில்லை. முரசொலி அறக்கட்டளையில் தனது மகனுக்கு பொறுப்புக் கொடுத்தால் போதும் என கேட்டுப்பார்த்தும் அழகிரியின் கோரிக்கையை சட்டை செய்யவில்லை ஸ்டாலின். இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரி சமீபகாலமாக திமுகவுக்கு எதிராக கொஞ்சம் குரலை எழுப்பத் தொடங்கியுள்ளார்.

 

ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதால் ரஜினி கட்சியில் இணைந்து அவர் செயல்படக்கூடும் என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. ரஜினியை சந்தித்து மு.க.அழகிரி அவ்வப்போது அரசியல் நிலவரங்கள் குறித்து விசாரித்து வருகிறார். இந்நிலையில் அவர் ரஜினி கட்சிக்கு ஆதரவு தர இருப்பதாகக் கூறப்படுகிறது. வடமாவட்டங்களில், பாமக, தென் மாவட்டங்களில் மு.க.அழகிரியை வைத்து ஸ்டாலினை சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். 

அந்த வகையில், எம்ஜிஆருக்கு  அரசியல் பரிணாமம் ஏற்பட்டது மதுரை தான். விஜயகாந்த், தேமுதிகவை மதுரையில்தான் தொடங்கினார்.சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை இங்கிருந்தே தொடங்கப்பட்டது.  கமல், மக்கள் நீதி மய்யம் கட்சியை மதுரையில் இருந்து ஆரம்பித்தார்.  மதுரைக்கும் அரசியல் கட்சிக்கும் சென்டிமென்ட் உண்டு. ஏன், பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தாமரை மாநாடு மதுரையில் தொடங்கியது. இந்த பட்டியலில் ரஜினியும் தன்னுடைய கட்சியை மதுரையில் தொடங்க இருக்கிறார். அதற்கான பணிகளை அரசியல் கட்சிப்பணிகளை கவனிக்கும் டீம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

இந்தமாநாடு ஆகஸ்டில் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மாநாடு மு.க.அழகிரியில் முழு சப்போர்ட்டில் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல். ஆனால், மு.க.அழகிரி தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஆதரவாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.