rajinikanth last five year property details

பல வருடங்களாக ரஜினிகாந்த் அரசியல் குறித்து அவ்வப்போது பேசி வந்தாலும் தற்போது தான், அரசியல் களத்தில் குதித்துள்ளார். இவரின் அரசியல் பிரவேசம்தான் தற்போதைய பரபரப்புச் செய்தி. அலசி ஆராய்ந்தும, யோசித்துதான் ரஜினிகாந்த் இந்த முடிவை எடுத்திருந்தாலும், அடுத்து அவர் என்ன முடிவெடுப்பார், என்ன மாற்றத்தை கொண்டு வருவார் என பலரும் யோசித்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் கடந்த 5 வருட கால வருமானம் குறித்து ஆங்கில இணையதளமான ஃபின்அப் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஜினி காந்த் கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு சம்பாதித்துள்ளார்..?

2012 - ரூ 49 கோடி

2013 - ரூ 60 கோடி

2014 - ரூ 35 கோடி

2015 - ரூ 58 கோடி

2016 - ரூ 65 கோடி

மொத்த சொத்தின் மதிப்பு - ரூ 360 கோடி

சராசரியாக படங்களின் வருமானம் - ரூ 55 கோடி

தனி முதலீடுகள் - ரூ 110 கோடி

சொகுசு கார்கள் - ரூ 2.5 கோடி

ஆண்டின் வருமானவரி - ரூ 13 கோடி

இது போக அவர் 2002 இல் வாங்கிய போயஸ் கார்டன் வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ 35 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவை போக, ரஜினி தனது வருமானத்தில், சமூக சேவை அமைப்புகள் மற்றும் ஆன்மீக விஷயங்களுக்காக அவ்வப் போது நன்கொடைகளையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் இத்தனை கோடி சொத்துக்கள் இருந்தும், ரஜினி குடும்பத்தினர் மாநகராட்சிக்கு உயர்த்தப்பட்ட வாடகையைக் கொடுக்க இயலவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு சென்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த், சென்னை ஆழ்வார்பேட்டையில் டிராவல் எக்ஸ்சேன்ஜ் இந்தியா என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், மாநகராட்சி கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில்... மாநகராட்சி நிர்வாகம் திடீரென கட்டடத்துக்காக ரூ. 3,702 வசூலித்து வந்த வாடகைத் தொகையை 21,160 ரூபாயாக உயர்த்தியது.

இதை எதிர்த்து லதா ரஜினிகாந்த், தனக்கு இவ்வளவு வாடகை தர வசதி இல்லை என நீதிமன்றம் வரை சென்றார். ஆனால், அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது ரஜினியின் 5 வருட வருமானம் குறித்து இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.