எனக்கு இரண்டு கண்கள்; ஒன்று மோடி; மற்றொன்று ரஜினி என ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி கூறியுள்ளார்.
எனக்கு இரண்டு கண்கள்; ஒன்று மோடி; மற்றொன்று ரஜினி என ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி கூறியுள்ளார்.
ஜனவரியில் கட்சி தொடங்கப்படும், டிசம்பர் 31-ம் தேதி கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். ஆனால், உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், அறிவிக்கப்படாத ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் அவருக்கு மாற்றம் இல்லை. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரிலேயே அவர் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.
தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போன மனஉளைச்சலில் அவர் இருக்கிறார். நமது உறவினர் ஒருவருக்கு நிகழ்ந்தால் எப்படி அணுகுவோமோ அப்படியே ரஜினியின் உடல்நிலையையும் அணுகி அவரது முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு மோடி ஒரு கண், ரஜினி இன்னொரு கண். இருவரும் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். ரஜினிகாந்துடன் இருப்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ரஜினி மக்கள் சேவை செய்யும்போது துணையாக நிற்பேன்.
மேலும், ரஜினியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். பாஜக உடன் எனக்கு நெருங்கிய உறவு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் ரஜினியுடன் சேர்ந்தேன் என அர்ஜூன மூர்த்தி கூறியுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 30, 2020, 4:47 PM IST