ரஜினியின் சமீபத்திய ட்விட் எதிரிகளை திசை திருப்பவே என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற ஒரு மாயையை உருவாக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் அவருக்கு எதிரான வேலைகளை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் ட்வீட் செய்திருக்கிறார். அவர் கண்டிப்பாக பிப்ரவரி மாதம் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு ரஜினி வந்தால் மட்டுமே தேர்தலில் யாரை எதிர்ப்பது எப்படி எதிர்ப்பது என்பது மட்டும் அவரது எதிரிகளின் குறிக்கோளாக இருக்கும். அதற்கு முன்னர் வந்தால் அவரது கட்சியினரை விலைக்கு வாங்க வாய்ப்பு உள்ளது. முன்கூட்டியே வந்தால் அவருடைய புகழுக்கு டேமேஜ் உருவாக்கும் வகையிலும் வேலை செய்வார்கள்.

எனவே எதிரிகளுக்கு நேரம் கொடுக்காமல் அதிரடியாக நுழைந்து வெற்றி பெற வேண்டும் என்பதே ரஜினியின் திட்டம். அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறிக் கொண்டே இருந்தாலும் கண்டிப்பாக பிப்ரவரி மாதம் அவர் அரசியலுக்கு வருவார்’’என்று ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். அவர் கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.