நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் சென்று சேரும் இடம் ஒன்றுதான் மக்களுக்கு செய்யனும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமலஹாசன் கடந்த 21 ஆம் தேதி மதுரை ஒத்தகடையில் பொதுக்கூட்டத்தை கூட்டி கட்சியின் பெயரையும் கொடியையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தினார். 

அதற்கு மக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்நிலையில் இன்று ரஜினி திடீரென நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய ரஜினி, நான் ஒரு நல்ல தலைவனாக இருக்க விரும்புவதாகவும் கோதாவில் குதிக்க சிறிது காலம் அவகாசம் தேவைப்படும் எனவும் பேசினார். 

மேலும் யார் வேண்டுமானாலும் அவசரப்படட்டும் நாம் பொறுமையாக கையாளுவோம் எனவும் குறிப்பிட்டார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினி, நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் சென்று சேரும் இடம் ஒன்றுதான் மக்களுக்கு செய்யனும் என தெரிவித்தார். 

கமலஹாசனின் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது எனவும் கடைசிவரை நிகழ்ச்சியை பார்த்தேன் எனவும் குறிப்பிட்டார். 

கமலஹாசன் நல்ல திறமைசாலி எனவும் மக்கள் நன்மதிப்பதிப்பை சம்பாதிப்பார் என நம்புகிறேன் எனவும் தெரிவித்தார். கமலின் மக்கள் நீதி மய்யம் நன்றாக செயல்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.